• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆளுக்கு ரூ.800.. இதை வச்சு வாடிப்பட்டிக்கு தான் போக முடியும்.. தவெக பட்ஜெட் அறிவிப்பால் குழப்பம்! | TVK Budget Faces Criticism as Senior Citizens’ Pilgrimage Scheme Allocates Just ₹800 Per Person

GenevaTimes by GenevaTimes
August 6, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஆளுக்கு ரூ.800.. இதை வச்சு வாடிப்பட்டிக்கு தான் போக முடியும்.. தவெக பட்ஜெட் அறிவிப்பால் குழப்பம்! | TVK Budget Faces Criticism as Senior Citizens’ Pilgrimage Scheme Allocates Just ₹800 Per Person
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Vignesh Selvaraj

Time
Updated: Thursday, August 6, 2026, 22:54 [IST]

சென்னை: தவெக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், நிதி ஒதுக்கீடு மிகக் குறைவாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மூத்த குடிமக்கள் புனித பயணத்திட்டத்தில் ஒரு நபருக்கு ரூ.800 என்ற அளவிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தனது முதல் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தது. நிதி அமைச்சர் மரிய வில்சன் தவெக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு புனிதப் பயணம் என்ற திட்டத்தில் ஆண்டுதோறும் 2.5 லட்சம் மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

TVK Budget Faces Criticism as Senior Citizens Pilgrimage Scheme Allocates Just 800 Per Person

விரும்பிய புனிதத் தலங்களுக்கு அரசு ஏற்பாட்டில் பயணம் குளிர்சாதன வசதியுடன் பயணம், தரமான தங்குமிடம் மற்றும் உணவு வசதி வழங்கப்படும். இதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

மூத்த குடிமக்கள் புனித பயணத்திட்டம் என்று பெயர் மாற்றிவிட்டு, இந்த திட்டத்தில் 2.5 லட்சம் நபர்கள் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தவெக அரசு அறிவித்திருக்கிற மொத்த தொகை 20 கோடி. அதாவது தலா ரூ.800 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொகையை வைத்து புனித பயணமாக வாட்டிகன் போக முடியாது, வாடிப்பட்டி மாதா கோயிலுக்கு போக மட்டுமே முடியும், அதுவும் போய்விட்டு திரும்ப முடியாது என நெட்டிசன் ஒருவர் ஃபேஸ்புக்கில் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

இதுபோல, பல்வேறு திட்டங்களிலும் பயனாளிகள் எண்ணிக்கையை அதிகமாக தெரிவித்துள்ளனர். அதேசமயம், நிதி ஒதுக்கீடு மிகக் குறைவாக உள்ளது. இந்தத் திட்டங்களை அறிவித்துள்ளபடி செயல்படுத்துவது ஆகாத காரியம் என்கிறார்கள் பலரும்.

வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்திற்கு 110 கோடி நிதி அறிவித்து, 30,000 பேர் பயன் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 12,600 கிராமப் பஞ்சாயத்துகள் உள்ள நிலையில், ஒரு கிராம ஊராட்சிக்கு 2 பேர் மட்டுமே பயன்பெற முடியும் என்ற அளவில் இந்த திட்டம் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

English summary

Several schemes have been announced in the budget presented by the TVK government. However, criticisms have arisen regarding the very low financial allocation. It has come to light that the fund allocated for the senior citizens’ pilgrimage scheme amounts to only ₹800 per person.

Read More

Previous Post

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் பதற்றம்

Next Post

ஹோண்டா நிறுவனத்தின் நிலைமையை பாத்தீங்களா.. டாடா-வுக்கு அடித்த யோகம்! | Honda Give Historic Vehicle Platform Contract to Tata Technologies Amid First Loss Since 1948

Next Post
ஹோண்டா நிறுவனத்தின் நிலைமையை பாத்தீங்களா.. டாடா-வுக்கு அடித்த யோகம்! | Honda Give Historic Vehicle Platform Contract to Tata Technologies Amid First Loss Since 1948

ஹோண்டா நிறுவனத்தின் நிலைமையை பாத்தீங்களா.. டாடா-வுக்கு அடித்த யோகம்! | Honda Give Historic Vehicle Platform Contract to Tata Technologies Amid First Loss Since 1948

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin