• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஹெல்த் இன்சூரன்ஸ் டிடக்டிபிள் என்றால் என்ன? இதை தேர்வு செய்தால் ப்ரீமியம் தொகை குறையுமா? | Can Choosing a Deductible Cut Your Health Insurance Premium? Here’s How

GenevaTimes by GenevaTimes
August 6, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஹெல்த் இன்சூரன்ஸ் டிடக்டிபிள் என்றால் என்ன? இதை தேர்வு செய்தால் ப்ரீமியம் தொகை குறையுமா? | Can Choosing a Deductible Cut Your Health Insurance Premium? Here’s How
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹெல்த் இன்சூரன்ஸ் டிடக்டிபிள் என்றால் என்ன? இதை தேர்வு செய்தால் ப்ரீமியம் தொகை குறையுமா?

சில காலமாகவே ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ரீமியம் தொகை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதற்காக இன்சூரன்ஸ் பாலிசி வாங்காமலும் இருக்க முடியாது. ஒரு சில குடும்பங்களில் ஒரே ஒருவர் சம்பாதிப்பவராக இருந்தாலும் தங்கள் குழந்தைகள், மனைவி, பெற்றோர்.. இப்படி பலருடைய பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காகவே இன்சூரன்ஸ் வாங்குவார்கள். அப்படி இருக்கும் சிலருக்கு இன்சூரன்ஸ் தொகையை குறைப்பதற்காகவே டிடக்டிபிள் (Deductible) என்ற வசதி இருக்கிறது.

டிடக்டிபிள் என்றால் என்ன? இந்த வசதியை எப்படி பயன்படுத்துவது? என்பது குறித்து பார்ப்போம். இன்சூரன்ஸ் பெறுபவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தினால் ப்ரீமியம் தொகையில் 22 முதல் 50 சதவீதம் வரை சேமிக்க முடியும்.

ஹெல்த் இன்சூரன்ஸ் டிடக்டிபிள் என்றால் என்ன? இதை தேர்வு செய்தால் ப்ரீமியம் தொகை குறையுமா?

டிடக்டிபிள் என்றால் என்ன?: டிடக்டிபிள் என்பது இன்சூரன்ஸ் வழங்கும் நிறுவனங்கள் அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் ஒரு வசதி. அதாவது ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் அவர் இன்சூரன்ஸ் பெற்றிருக்கிறார். உங்களுக்கு இன்சூரன்ஸ் கம்பெனி பணத்தை வழங்குவதற்கு முன்பு நீங்கள் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய தொகை தான் இந்த டிடக்டிபிள்.

உதாரணமாக நீங்கள் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து ரூ.25,000 டிடக்டிபிள் கொண்ட பாலிசியை தேர்வு செய்து இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் இன்சூரன்ஸ் பெற்ற அதே ஆண்டில் உங்களுக்கு ரூ.2 லட்சம் மருத்துவச் செலவு வருகிறது என்றால்.. நீங்கள் ரூ.25,000-த்தைக் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும்.

மீதமுள்ள ரூ.1.75 லட்சத்தை இன்சூரன்ஸ் நிறுவனமே வழங்கிவிடும். அதுவே உங்கள் மருத்துவமனை செலவு அந்த குறிப்பிட்ட ஆண்டில் ரூ.25,000-த்திற்கும் குறைவாக இருந்தால் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தரப்பில் எந்த தொகையும் வழங்கப்பட மாட்டாது.

பாலிசி போடப்படும் ஆண்டில் ஒரு முறை நீங்கள் டிடக்டிபிள் செலுத்திவிட்டால் அடுத்தடுத்து வரும் மருத்துவச் செலவுகளை இன்சூரன்ஸ் நிறுவனமே முழுமையாக ஏற்றுக் கொள்ளும்.

டிடக்டிபிள் மற்றும் கோ-பே ஆகிய இரண்டு ஆப்ஷனுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன?:

கோபே என்பது மருத்துவமனையில் இருந்து எவ்வளவு தொகை வருகிறதோ அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை பாலிசிதாரர் செலுத்த வேண்டும். டிடக்டிபிள் என்பது எந்த தொகை வந்தாலும் சரி முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட தொகையை செலுத்தினால் போதும்.

கோபே அப்ஷனில் பில் தொகைக்கு ஏற்ப நீங்கள் செலுத்தும் தொகையும் மாறுபடும். உதாரணமாக உங்களுக்கு மருத்துவமனை பில் ரூ.10 லட்சம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். உதாரணமாக நீங்கள் 20% கோ பே ஆப்ஷனை தேர்ந்தெடுத்திருந்தால்..10 லட்சத்தில் 20% என்றால் ரூ.2 லட்சத்தை செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.8 லட்சத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கிவிடும்.

அதுவே நீங்கள் ரூ.25,000 என்ற டிடக்டிபிள் தொகையை தேர்ந்தெடுத்திருந்தால் அதை மட்டும் செலுத்தினால் போதுமானது. மீதி உள்ள தொகையை ரூ.9,75,000-த்தை இன்சூரன்ஸ் நிறுவனம் உங்கள் சார்பில் வழங்கிவிடும்.

அடிக்கடி மருத்துவச் செலவுகள் இருக்கும் நபர்களுக்கு இந்த டிடக்டிபிள் ஆப்ஷன் அவ்வளவு பொருத்தமானதாக இருக்காது. புற்றுநோயினால் அவதிப்பட்டு அடிக்கடி கிமோ சிகிச்சை எடுப்பவர்கள் ஒரே வாரத்தில் பலமுறை மருத்துவமனைக்கு செல்லும் நபர்கள் போன்றோருக்கு இந்த டிடக்டிபிள் ஆப்ஷன் உதவாது.

Share This Article

Story first published: Thursday, August 6, 2026, 18:46 [IST]

Other articles published on Aug 6, 2026

Read More

Previous Post

இன்னும் விலகாத மர்மம்… 24 மணி நேரத்தில் உயிரைப் பறிக்கும் 'சந்திப்புரா வைரஸ்'.. ஏன் ஆபத்தானது..?

Next Post

பெர்லிஸில் சாக்குப்பையில் மேலும் மனித எலும்புக்கூடு; கொலை என சந்தேகிக்கப்படுகிறது | Makkal Osai

Next Post
பெர்லிஸில் சாக்குப்பையில் மேலும் மனித எலும்புக்கூடு; கொலை என சந்தேகிக்கப்படுகிறது | Makkal Osai

பெர்லிஸில் சாக்குப்பையில் மேலும் மனித எலும்புக்கூடு; கொலை என சந்தேகிக்கப்படுகிறது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin