
செ.தி.பெருமாள்
மத்திய மலைநாட்டில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக, நல்லத்தண்ணி – ஸ்ரீபாத பாதையின் ‘அஹேல கனு’ பகுதியில் இடம்பெற்ற மண் சரிவு ஒன்றினால் குறித்த பாதை முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
இப்பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே நல்லத்தண்ணி – ஸ்ரீபாத பாதையில் அமைந்துள்ள ‘அஹேல கனு’ பகுதிக்கு அருகில் மண் மேட்டின் ஒரு பகுதி சரிந்து விழுந்து பாதை இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரதீப் வீரசேகரத் தெரிவித்தார்.
பாதையில் சரிந்து விழுந்துள்ள மண்ணை உடனடியாக அகற்றி, வழமையான போக்குவரத்தை மீள ஸ்தாபிப்பதற்காக விசேட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை அப்பகுதிக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதீப் வீரசேகர மேலும் குறிப்பிட்டார்.



