• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஷகிப் அல் ஹசன் வீட்டில் குண்டு வீச்சு.. ஷேக் ஹசீனா பிரஸ்மீட்டில் பங்கேற்றதால் சூறையாடிய கும்பல் | Petrol bomb thrown on Shakib Al hasan house after he participates Sheikh Hasina press conference

GenevaTimes by GenevaTimes
August 6, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஷகிப் அல் ஹசன் வீட்டில் குண்டு வீச்சு.. ஷேக் ஹசீனா பிரஸ்மீட்டில் பங்கேற்றதால் சூறையாடிய கும்பல் | Petrol bomb thrown on Shakib Al hasan house after he participates Sheikh Hasina press conference
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Nantha Kumar R

Time
Updated: Thursday, August 6, 2026, 8:21 [IST]

டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அந்நாட்டின் மாஜி பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்பியுமான ஷகிப் அல் ஹசனின் வீட்டில் நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசி வீடு சூறையாடப்பட்ட நிலையில் அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசன். சிறந்த ஆல்ரவுண்டரான இவர் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தீவிர ஆதரவாளர். அவரது கட்சி சார்பில் போட்டியிட்டு எம்பியாகவும் இருந்தார்.

shakib al hasan sheikh hasina bangladesh

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்தார். இதனால் அவரது ஆட்சி கலைந்தது. ஷகிப் அல் ஹசன் தனது எம்பி பதவியை இழந்தார். கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஷேக் ஹசீனா நம் நாட்டில் இருந்து வருகிறார்.

அவரை நாடு கடத்தும்படி பலமுறை வங்கதேசம் கூறினாலும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. அதுமட்டுமின்றி வங்கதேசத்தில் அவரது கட்சி தடை செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி அவரது கட்சியை சேர்ந்த தலைவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டோடு, வீடுகள் சூறையாடப்பட்டன. இதற்கிடையே தான் விரைவில் ஷேக் ஹசீனா வங்கதேசம் செல்வதாக அறிவித்துள்ளார். டிசம்பர் மாதம் அவர் இந்தியாவை விட்டுவிட்டு வங்கதேசம் செல்வதாக கூறியுள்ளார்.

இனப்படுகொலை குற்றச்சாட்டில் ஷேக் ஹசீனாவிற்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை அறிவித்து இருந்தாலும் அவர் தனது சொந்த நாட்டுக்கு திரும்பும் முடிவில் உறுதியாக உள்ளார். இதற்கிடையே தான் நேற்று டெல்லியில் ‘ஃபாரின் கரஸ்பாண்டன்ட் கிளப்’ பிரஸ் கான்பரன்ஸில் ஷேக் ஹசீனா பங்கேற்றார். இந்தியா வந்த பிறகு அவரது முதல் ஆன்லைன் நேரலை பத்திரிகையாளர் சந்திப்பு இதுவாகும்.

இந்த பிரஸ் கான்பரன்சில் ஷகிப் அல் ஹசன் ஆன்லைன் வழியாக பங்கேற்றார். இதற்கு வங்கதேசத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வங்கதேசத்தை ஆளும் பிஎன்பி, ஜமாத் இ இஸ்லாமி உள்பட பல்வேறு கட்சியினர் கொந்தளித்தனர். இதற்கிடையே தான் ஷகிப் அல் ஹசனுக்கு சொந்தமான வீடு மாகுரா டனுவில் உள்ள கேஷாப்மார் என்ற இடத்தில் உள்ளது. இந்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வீடு சூறையாடப்பட்டது.

இதுபற்றி வங்கதேசத்தின் அவாமி லீக் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ”வங்கதேசத்தில் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டள்ளன. புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா உடனான செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார்.

அடுத்த சில மணிநேரங்களிலேயே அவரது இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டள்ளது. ஷேக் ஹசீனா பற்றிய செய்திகளை வெளியிட்டால் நீதிமன்றங்கள் வழியாக வழக்குகள் தொடரப்படும் என்று பிஎன்பி, இஸ்லாமிய ஜமாத் மற்றும் என்சிபி கட்சிகள் மிரட்டல் விடுத்தன. அவாமி லீக் கட்சி தொண்டர்களுக்கு எதிராக தொடர்ந்து நடத்தப்படும் கொலை வெறி தாக்குதல், படுகொலைக்கு இது மற்றொரு சான்றாக அமைந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

English summary

Petrol Bomb Attack on Shakib Al Hasan House: An attack was carried out last night on the residence of Shakib Al Hasan—the former captain of the Bangladesh cricket team and a former MP representing the Awami League party of the country’s former Prime Minister, Sheikh Hasina. Shocking details have emerged regarding the background of the incident, in which the house was ransacked and a petrol bomb was hurled at it.

Read More

Previous Post

மத்திய வங்கியின் அதிரடி நடவடிக்கை – தடை செய்யப்பட்ட நிறுவனங்கள்

Next Post

ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தைகள்.. தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்தது! | வணிகச் செய்திகள்

Next Post
ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தைகள்.. தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்தது! | வணிகச் செய்திகள்

ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தைகள்.. தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்தது! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin