Last Updated:
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை இலட்சினை கவரில் உடல் பாகங்கள் சுற்றப்பட்டிருந்ததால், விசாரணை குழு சென்னைக்கு விரைந்த
சென்னையில் இருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து டெல்லி நோக்கி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது. நேற்று அதிகாலை ஆக்ரா கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸிலிருந்து ரத்தம் போன்ற திரவம் வெளியேறியதுடன் துர்நாற்றம் வீசியதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் ரயில்வே காவலர்களிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆக்ரா கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு அந்த சூட்கேஸை திறந்து பார்த்தனர். இதில், சூட்கேஸினுள் மனித உடல்பாகங்கள் இருந்தன. அவற்றை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னையின் இலட்சினை பொறிக்கப்பட்ட கவரில் உடல் பாகங்கள் சுற்றப்பட்டிருந்ததை அடுத்து, இதுபற்றி துப்புதுலக்க சென்னைக்கு விசாரணை குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த ரயில் பெட்டிக்குள் சூட்கேஸை எப்போது, யாரால் வைக்கப்பட்டது என்பதை உறுதி செய்வதற்காக, ரயில் நின்ற ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.


