அராலி வடக்கு பகுதியில் மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் துணிகரக் கொள்ளைச்
சம்பவம் ஒன்று நேற்றிரவு(04) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்றிரவு மின்சாரம் தடைப்பட்டபோது நால்வர் கொண்ட கும்பல் ஒன்று அராலி வடக்கு
பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்கள் மீது
தாக்குதல் நடாத்தியுள்ளது.
பின்னர் அந்த வீட்டில் இருந்த 10 பவுண் தங்க
ஆபரணங்களை அந்த கும்பலானது கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
முகங்களை மூடி கட்டியவாறு வந்த கும்பல்
குறித்த கும்பலானது முகங்களை மூடி கட்டியவாறு வந்ததால் அடையாளம் காண
முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டது. வட்டுக்கோட்டை காவல்துறையினர் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

