• Login
Wednesday, August 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஹாலிவுட் வெப் சீரிஸ் பார்த்து கொடூரம்.. மனைவிக்கு கணவன் போட்ட ஸ்கெட்ச்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
August 5, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஹாலிவுட் வெப் சீரிஸ் பார்த்து கொடூரம்.. மனைவிக்கு கணவன் போட்ட ஸ்கெட்ச்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Aug 05, 2026 1:27 PM IST

டெல்லியில் ஹாலிவுட் வெப் சீரிஸ் பார்த்து மனைவியை கொலை செய்த கணவன் கமல் சிங், நேபாளம் தப்ப முயன்றபோது மதுராவில் கைது செய்யப்பட்டார்.

படம் (ஏஐ)
படம் (ஏஐ)

டெல்லியில் ஹாலிவுட் வெப் சீரிஸைப் பார்த்து மனைவியைக் கொலை செய்த கணவன் நேபாளம் தப்ப முயன்று போலீசாரிடம் சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

டெல்லி ஜகத்புரி பகுதியைச் சேர்ந்தவர் 52 வயதான கமல் சிங். மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியாளரான இவர், தனது மனைவி கோமலுடன் வசித்து வந்தார். குடும்ப சொத்து தொடர்பாக இருவருக்கும் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காலை, மகன் கௌரவ் நூலகத்திற்கும், மகள் தனது வேலைக்கும் சென்றுவிட்டனர். வீட்டில் கமல் சிங்கும், அவரது மனைவி கோமலும் மட்டும் இருந்த நிலையில், இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் தலைக்கேறிய கமல்சிங் கத்தரிக்கோலால், கோமலை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். பின்னர், ரத்தக்கறை படிந்த ஆயுதத்தை மறைத்து வைத்து விட்டு, வீட்டை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மாலை முழுவதும் தாயை தொடர்பு கொள்ள முயன்ற மகன் மற்றும் மகளுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த மகன், இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வரவேற்பறையில் ரத்த வெள்ளத்தில் தாயின் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

விசாரணையில், கமல் சிங் கொலைக்கு முன்பாகவே தனது வங்கி கணக்கிலிருந்து சுமார் 7 லட்சம் ரூபாயை எடுத்திருப்பதும், நேபாளத்திற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. பின்னர் போலீசாரை திசைதிருப்பும் நோக்கில் தனது பயண பாதையை மாற்றியிருந்தாலும், தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் அவரது இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது. இறுதியாக உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த கமல் சிங்கை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், ‘தி ஸ்டேர்கேஸ்’ என்ற ஹாலிவுட் வெப் தொடரில் வருவது போன்று, போலீசாரிடம் சிக்காமல் தப்பிக்க திட்டமிட்டு இந்த கொலையை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், சொத்தின் முழு உரிமையையும் தன்வசப்படுத்தும் நோக்கிலேயே, இந்த கொலையை முன்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றியதாகவும் கமல் சிங் தெரிவித்துள்ளனர். மனைவியை காலை செய்து விட்டு ஹாலிவுட் பாணியில் தப்ப முயன்றவர் போலீசாரிடம் சிக்கியிருப்பது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

ஹாலிவுட் வெப் சீரிஸ் பார்த்து கொடூரம்.. மனைவிக்கு கணவன் போட்ட ஸ்கெட்ச்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

Read More

Previous Post

குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானத்தை மீட்க நடவடிக்கை

Next Post

அலறிய துபாய்.. விடிந்ததும் ஹவுதி படையின் திடீர் தாக்குதல்.. ஜெமல் அலி பகுதியில் என்ன நடந்தது? | Houthi Attack on Dubai’s Jebel Ali? Multiple Explosions Rock Industrial Zone & Port Early Morning

Next Post
அலறிய துபாய்.. விடிந்ததும் ஹவுதி படையின் திடீர் தாக்குதல்.. ஜெமல் அலி பகுதியில் என்ன நடந்தது? | Houthi Attack on Dubai’s Jebel Ali? Multiple Explosions Rock Industrial Zone & Port Early Morning

அலறிய துபாய்.. விடிந்ததும் ஹவுதி படையின் திடீர் தாக்குதல்.. ஜெமல் அலி பகுதியில் என்ன நடந்தது? | Houthi Attack on Dubai’s Jebel Ali? Multiple Explosions Rock Industrial Zone & Port Early Morning

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin