Last Updated:
நியுசிலாந்தின் தெற்குத் தீவுடைய கிழக்குப் பகுதி முழுவதும் உறைபனி பொழியும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
நியூசிலாந்தின் தெற்குத் தீவின் சில பகுதிகளில் அண்டார்டிக் துருவக் காற்று வீசியதால் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. கடும் குளிரும் வாட்டி வதைத்து வருவதால் சாலைகள் மூடப்பட்டு, மாணவர்கள் பள்ளிக்குச் செல்வது பாதிக்கப்பட்டது.
தெற்குத் தீவின் இரண்டாவது பெரிய நகரமான டுனெடினில் பனிப்படலம் முழுமையாக போர்த்தியதால், சாலைகள் பனிக்கட்டியாக மாறியுள்ளன. இதனால், மிகவும் அத்தியாவசியமான பயணங்களைத் தவிர மற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு காவல்துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
நகரில் அனைத்துப் பேருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பலத்த காற்று மற்றும் பெரும் கடல் கொந்தளிப்பு காரணமாக நியூசிலாந்தின் வடக்கு மற்றும் தெற்குத் தீவுகளுக்கு இடையேயான படகு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. நியூசிலாந்தின் வானிலை ஆய்வு மையமான மெட்சர்வீஸ், இந்தக் கடும் குளிர் அடுத்த இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்றும், இதனால் தெற்குத் தீவின் கிழக்குப் பகுதி முழுவதும் உறைபனி பொழியும் என்றும் தெரிவித்துள்ளது.
Aug 05, 2026 10:46 AM IST


