• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || 3 பாடங்களிலும் 27,000 பேர் சித்தியடையவில்லை

GenevaTimes by GenevaTimes
June 3, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || 3 பாடங்களிலும் 27,000 பேர் சித்தியடையவில்லை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 10.04 வீதமானவர்கள் சகல பாடங்களிலும் சித்தியடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


அதேவேளை பரீட்சைக்கு தோற்றிய 269,613 விண்ணப்பதாரர்களில் 27,970 பேர் சகல பாடங்களிலும் சித்தியடையவில்லை என்றும் பரீட்சை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.


இவ்வருட பரீட்சை பெறுபேறுகள் சாதனை அதிகரிப்பை காட்டுவதாக தெரிவித்த அவர், விண்ணப்பித்தவர்களில் 173,444 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாகவும் இது 64.33 வீதமாகும் எனவும் தெரிவித்தார்.


மூன்று பாடங்களிலும் 10,484 பரீட்சார்த்திகள் சித்தியடைந்துள்ளதாகவும், இது 3.9 வீதமாகும் எனவும் ஜெயசுந்தர தெரிவித்தார்.


இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றிய 190 விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 146 தனியார் விண்ணப்பதாரர்களும் 44 பாடசாலை விண்ணப்பதாரர்களும் உள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.


2023 உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களில் ஆண் பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை வீழ்ச்சியையும் பெண் பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை அதிகரிப்பையும் காட்டுவதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.


மேலும், பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களில் 27,000 பேர் மூன்று பாடங்களிலும் சித்தியடையாமை இலங்கைக் கல்வி முறைமையில் பாரிய பின்னடைவை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயர்தர மீள் கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக பரீட்சை திணைக்களத்தின் ஒன்லைன் முறையானது ஜூன் மாதம் 5 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை திறக்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.


உயர்தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 229,057 பாடசாலை பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதோடு 40,556 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  



Read More

Previous Post

‘அடுத்த ஐபிஎல் ஏலத்தில் இவரை எடுக்க கடும் போட்டி இருக்கும்’

Next Post

“யாருக்கும் அஞ்சாதீர்கள்” – அரசு அதிகாரிகளுக்கு கார்கே கடிதம் | Congress chief Kharge pens open letter to bureaucrats ahead of election results

Next Post
“யாருக்கும் அஞ்சாதீர்கள்” – அரசு அதிகாரிகளுக்கு கார்கே கடிதம் | Congress chief Kharge pens open letter to bureaucrats ahead of election results

“யாருக்கும் அஞ்சாதீர்கள்” - அரசு அதிகாரிகளுக்கு கார்கே கடிதம் | Congress chief Kharge pens open letter to bureaucrats ahead of election results

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin