• Login
Tuesday, August 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களுக்கு ஷாக் அறிவிப்பு.. டிரம்பின் புதிய கட்டணம்.. இந்திய ஐடி ஊழியர்களுக்கு நெருக்கடி | H-1B Visa Renewal Fee Shock: Trump Admin Plans $4,000–$5,000 Charge for Visa Extensions, Hitting Indian IT Workers Hard

GenevaTimes by GenevaTimes
August 4, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களுக்கு ஷாக் அறிவிப்பு.. டிரம்பின் புதிய கட்டணம்.. இந்திய ஐடி ஊழியர்களுக்கு நெருக்கடி | H-1B Visa Renewal Fee Shock: Trump Admin Plans $4,000–$5,000 Charge for Visa Extensions, Hitting Indian IT Workers Hard
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களுக்கு ஷாக் அறிவிப்பு.. டிரம்பின் புதிய கட்டணம்.. இந்திய ஐடி ஊழியர்களுக்கு நெருக்கடி

அமெரிக்காவில் இருக்கும் பெரும்பாலான டெக், மருத்துவம், மற்றும் பிற உயர் தொழில்நுட்ப துறை சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் அதிகளவிலான வெளிநாட்டு ஊழியர்களை நம்பி தான் இயங்கி வருகிறது. ஆனால் டிரம்ப் அரசு வெளிநாட்டு ஊழியர்களின் வருகை காரணமாக அந்நாட்டின் மக்களுக்கான வேலைவாய்ப்புகள் பெரிய அளவில் குறைந்து வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி, வெளிநாட்டவர்களுக்கான விசா, குடியுரிமை விதிகளில் தொடர்ந்து மாற்றங்களையும், கட்டணங்களையும் விதிக்கப்பட்டு வருகிறது.

இதன் நீட்சியாக புதிதாக விசா வாங்கும் போது மட்டுமே கட்டணத்தை செலுத்த நிலையை மாற்றி இனி விசா ரினிவல்-க்கும் கட்டணத்தை செலுத்த வேண்டிய வகையில் சட்ட திருத்தை கொண்டு வர டிரம்ப் அரசு முயற்சி செய்து வருகிறது.

ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களுக்கு ஷாக் அறிவிப்பு.. டிரம்பின் புதிய கட்டணம்.. இந்திய ஐடி ஊழியர்களுக்கு நெருக்கடி

தற்போது வெளியாகியுள்ள தகவல் படி இனி நிறுவனங்கள் ஹெச்1பி, எல்1 விசாக்களில் இருக்கும் ஊழியர்களை நிறுவனத்தில் தக்கவைத்துக்கொள்ள விசா ரினிவல் செய்து விசா காலத்தை நீட்டிக்க வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும் வகையில் திருத்தம் செய்ய டிரம்ப் நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது.

டிரம்ப் அரசின் இந்த முயற்சி வெற்றிப்பெற்றால் இதுவரையில் ஹெச்1பி, எல்-1 விசாக்களில் புதிதாக ஊழியர்களை சேர்க்கும் போதோ அல்லது ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் போது மட்டுமே அமெரிக்க நிறுவனங்கள் செலுத்தி வந்த கட்டணம் இனி வரும் காலக்கட்டத்தில் விசா ரினிவல் செய்யும் போது செலுத்த வேண்டி வரும்.

இதுநாள் வரையில் விசா ரினிவலுக்கு அமெரிக்க நிறுவனங்கள் எவ்விதமான கட்டணத்தையும் செலுத்த தேவையில்லை, ஆனால் தற்போது டிரம்ப் அரசின் விதி மாற்றம் காரணத்தால் 4000 முதல் 5000 டாலர் செலுத்தியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்.

இதனால் ஹெச்1பி விசாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களுடைய பணியை தொடர வேண்டுமாயின் அந்த நிறுவனம் இந்த 5000 டாலரை செலுத்த வேண்டும், இது கிட்டத்தட்ட புதிதாக விசா பெற்று வேலைக்கு சேருவதற்கு இணையாக கடின நிலையை விசா ரினிவலுக்கும் உருவாக்கும்.

இந்த கட்டணத்தை செலுத்த விரும்பாத பல அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை பணியில் இருந்து நீக்க வழிவகுக்கவும் வாய்ப்புள்ளது.

தற்போது இத்திட்டத்தை அமெரிக்காவின் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி, தொழிலாளர் துறை, மாநில துறை ஆகியவை ஜூலை மாதம் வெளியிட்டது. இதற்கான முடிவை எடுத்த சில வாரங்களில் எடுக்கப்பட உள்ளது.

இந்த கட்டணம் மூலம் யாருக்கு பெரும் பாதிப்பு..?

ஒரு அமெரிக்க நிறுவனம் 50 பேருக்கும் அதிகமான ஊழியர்களை கொண்டு இயங்கி வரும் பட்சத்தில் அதில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஹெச்1பி, எல்-1 விசாவில் பணியாற்றினால் ஹெச்1பி விசா ரினிவலுக்கு 4000 டாலரும், எல்-1 விசா ரினிவலுக்கு 4500 டாலர் செலுத்த வேண்டும்.

இந்த கட்டணம் 50 சதவீத ஊழியர்களுக்கும் குறைவாகவே ஹெச்-1பி, எல்-1 விசாவில் இருந்தால் வராது. இதனால் அதிக விசா ஊழியர்களை கொண்ட அனைவருக்கும் இந்த பாதிப்பு இருக்கும்.

Share This Article

English summary

H-1B Visa Renewal Fee Shock: Trump Admin Plans $4,000–$5,000 Charge for Visa Extensions, Hitting Indian IT Workers Hard

H-1B Visa Renewal Fee Shock: Trump Admin Plans $4,000–$5,000 Charge for Visa Extensions, Hitting Indian IT Workers Hard — ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களுக்கு ஷாக் அறிவிப்பு.. டிரம்பின் புதிய கட்டணம்.. இந்திய ஐடி ஊழியர்களுக்கு நெருக்கடி!

Story first published: Tuesday, August 4, 2026, 19:58 [IST]

Other articles published on Aug 4, 2026

Read More

Previous Post

போல்ட் இடத்தில் கலீல் அஹ்மத்.. ரூதர்போர்ட் இடத்தில் சிவம் துபே.. மும்பை அணியின் மெகா டிரேட் பிளான்! | CSK: MI Plan Big Swap, Rutherford and Boult Out, Target Dube and Khaleel Ahmed from CSK

Next Post

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக தாய்லாந்தில் 3 மலேசியர்களுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். – Malaysiakini

Next Post

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக தாய்லாந்தில் 3 மலேசியர்களுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin