அடுத்த ஐபிஎல் மெகா ஏலத்தின் போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சேர்ந்த இளம் வீரரை தங்களது அணியில் எடுக்க நிர்வாகிகள் கடுமையாக போட்டி போடுவார்கள் என்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குனர் சௌரவ் கங்குலி கூறியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. குறிப்பாக அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் சுமார் ஒரு ஆண்டுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த நிலையில், டெல்லி அணியை சிறப்பாக வழி நடத்தி ஐந்தாவது இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
14 போட்டிகளில் விளையாடி லீக் சுற்றி நிறைவு செய்துள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி தலா 7 வெற்றி, தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 5ஆம் இடத்தில் உள்ளது. இந்த அணியின் நெட் ரன்ரேட் குறைவாக இருப்பதால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது.
டெல்லி அணியில் ரிஷப் பந்த், தொடக்க வீரராக களம் இறங்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ப்ரேசர் மெக்கர்க் உள்ளிட்டோர் சிறப்பான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றனர். இவர்களில் இளம் வீரர் ஜேக் ப்ரேசர் மெக்கர்க்கை ஏலத்தில் எடுப்பதற்கு பல அணிகள் வரவிருக்கும் ஐபிஎல் மெகா இடத்தில் போட்டி போடும் என சௌரவ் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார்.
டெல்லி அணிக்காக நடப்பு சீசனில் 9 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பிரேசர் 330 ரன்களை அதிரடியாக குவித்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 234 ஆக உள்ளது.
பவர் பிளே ஓவர்களில் இந்த இளம் வீரர் அதிரடியாக ரன்களை சேர்த்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுப்பதால், அடுத்து வரக்கூடிய வீரர்கள் இலகுவாக ரன்கள் சேர்க்க முடிகிறது. இருப்பினும் பிரேசர் மெக்கர்க்கு உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பு ஆஸ்திரேலிய அணியில் கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது
.
&w=750&resize=750,375&ssl=1)
