தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்தும், வழக்கில் தலையிட்டு தனது வாதங்களை முன்வைக்க அனுமதி கோரியும், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே தாக்கல் செய்த இடைக்கால மனுக்கள் மீதான பரிசீலனை, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (04) நடைபெற்றது.
அப்போது, இடைக்கால மனுக்களைத் தாக்கல் செய்த தேசபக்தி தேசிய இயக்கம் மற்றும் தேசபக்தி மக்கள் இயக்கம் ஆகிய அமைப்புகளுக்காக முன்னலையான வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.
மேல்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு
அதனைத் தொடர்ந்து, இடைக்கால மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனையை நாளை மறுதினம் (06 ஆம் திகதி) வரை ஒத்திவைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

