• Login
Wednesday, August 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

4 அமைச்சர்கள் மாற்றம்? முதல்-அமைசர் விஜய் முடிவு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 3, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
4 அமைச்சர்கள் மாற்றம்? முதல்-அமைசர் விஜய் முடிவு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை, பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதல்-அமைச்சர் விஜய் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

தவெக ஆட்சி

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியை பிடித்தது. முதல்வராக விஜய் பதவியேற்றார். அவரது கேபினட்டில் விஜய்யுடன் சேர்த்து 35 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இதில் செங்கோட்டையனை தவிர அனைவருமே முதல் முறை அமைச்சர்கள் ஆவர். இதனால், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து உளவுத்துறை மூலமாக தகவல்களை முதல்-அமைச்சர் விஜய் பெற்று வருவதாக கூறப்படுகிறது.

தமிழக அமைச்சரவை

இந்தநிலையில், தமிழக அமைச்சரவையில் மிக முக்கியமான மாற்றங்களை செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கோட்டை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் 4 அமைச்சர்கள் நீக்கப்படலாம் என தெரிகிறது.

லஞ்சம் இல்லாத ஆட்சி

திராவிட கட்சிகளின் 59 ஆண்டு கால அரசியல் ஆதிக்கத்தை உடைத்து, தமிழகத்தில் ஒரு மாற்று ஆட்சியை அமைத்துள்ள முதல்-அமைச்சர் விஜய் லஞ்சம் இல்லாத ஆட்சியை நடத்த பாடுபட்டு வருகிறார்.

பொதுமக்கள் யாரும் லஞ்சம் கொடுக்காதீர்கள். அதையும் மீறி அரசு அலுவலகங்களில் யாரேனும் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆட்சி அமைத்ததில் இருந்தே முதல்-அமைச்சர் விஜய் இதை வலியுறுத்தி வருவதால் மேல்மட்ட அளவில் உயர் அதிகாரிகள் யாரும் இப்போது லஞ்சம் வாங்குவதில்லை. அரசு அலுவலகங்களில் இப்போது கீழ்மட்ட அளவிலும் லஞ்சம் கேட்க பயப்படுகின்றனர்.

தூய்மையான ஆட்சியை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள முதல்-அமைச்சர் விஜய், தனது அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் யாரையும் சகித்துக் கொள்ள மாட்டேன் என்று அமைச்சரவை கூட்டத்தின் போதே அறிவுறுத்தினார்.

போலீஸ் கண்காணிப்பு

அதுமட்டுமின்றி சென்னை கோட்டையில் ஒவ்வொரு அமைச்சர்களின் அறையிலும் போலீஸ் கண்காணிப்பு இருந்து கொண்டே இருக்கிறது. யார்-யார் சந்திக்க வருகிறார்கள். டிரான்ஸ்பர்களுக்கு யாரேனும் பணம் வாங்குகிறார்களா? என்பதை கண்காணித்து கொண்டே இருக்கிறார்கள்.

சிபாரிசு கடிதம் பெறுவதற்கு பணம் பெறுகிறார்களா? என்பதையும் கண்காணித்து கொண்டே இருக்கிறார்கள். மொத்தத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பிலேயே உள்ளனர். இதையறிந்து யாரும் இப்போது பணம் வாங்குவதில்லை. ஆனாலும் ஒரு சில அமைச்சர்கள் மீதான மறைமுக குற்றச்சாட்டு புகார்கள் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என்பதால் ஆரம்பத்திலேயே ‘களை’ எடுக்க முதல்-அமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார்.

இதற்காக தனது அமைச்சர்களின் செயல்திறன் மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்த ரகசிய ஆய்வறிக்கையின் அடிப்படையில் முதல்-அமைச்சர் விஜய் தனது முதல் அமைச்சரவையை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளார்.

Previous articleஓடிடிக்கு வரும் அகில் அக்கினேனியின் ‘லெனின்’… எப்போது.. எதில் பார்க்கலாம்?…
tamiltamil



Read More

Previous Post

அமெரிக்காவிற்கான உக்ரைனின் தூதுவர் பதவி நீக்கம்

Next Post

“நீதியரசர்களின் ஓய்வூதிய வயது எல்லையை நீடிக்க வேண்டாம்”

Next Post
“நீதியரசர்களின் ஓய்வூதிய  வயது எல்லையை நீடிக்க வேண்டாம்”

“நீதியரசர்களின் ஓய்வூதிய வயது எல்லையை நீடிக்க வேண்டாம்”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin