Last Updated:
இந்தோனேசியாவில் சுமார் 250 பேர் பயணம் மேற்கொண்டிருந்த கப்பலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில், பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஆசிய கண்டத்தில் உள்ள இந்தோனேசியாவில் பல தீவுக்கூட்டங்கள் உள்ளன. தீவுகளுக்கு இடையேயான போக்குவரத்து சிறிய அளவிலான கப்பல்கள் மூலமே நடைபெறுகின்றன. கிழக்கு ஜாவா மாகாணம் சுரபயா நகரில் இருந்து தெற்கு சுலவசி மாகாணம் மகசர் நகருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை கப்பல் ஒன்று சென்றுகொண்டிருந்தது.
BREAKING: At least five people have died and 41 remain missing after the passenger ship KM Mutiara Sentosa 2 caught fire this morning off Madura Island in the Java Sea, near Sumenep Regency, Indonesia.
Inaccurate passenger manifests continue to hamper search and rescue efforts. pic.twitter.com/qqSgMYlh5B— Weather Monitor (@WeatherMonitors) August 2, 2026
சுமார் 250 பேர் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், கப்பலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த மற்ற கப்பல்களில் பயணித்தவர்கள் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்டோரை காணவில்லை எனக் கூறப்படுகிறது.


