• Login
Monday, August 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.3 கோடி முதலீட்டில் ரூ.30 கோடி லாபம்.. விக்ரம் பிரபு செய்த தரமான சம்பவம்..!! | Vikram Prabhu’s Sirai Turns into a Low-Budget Box Office Winner with Massive Returns

GenevaTimes by GenevaTimes
August 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.3 கோடி முதலீட்டில் ரூ.30 கோடி லாபம்.. விக்ரம் பிரபு செய்த தரமான சம்பவம்..!! | Vikram Prabhu’s Sirai Turns into a Low-Budget Box Office Winner with Massive Returns
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரூ.3 கோடி முதலீட்டில் ரூ.30 கோடி லாபம்.. விக்ரம் பிரபு செய்த தரமான சம்பவம்..!!

உலகளவில் திரைப்படங்கள் தான் பெரிய பிஸ்னஸ். குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்டு பல மடங்கு லாபம் தந்த படமும் உண்டு, பெரிய பட்ஜெட்டில் எடுத்து நஷ்டம் தந்த படங்களும் உண்டு. கதை நன்றாக இருந்தால் போதும் பெரிய பெரிய நடிகர்கள் இல்லை என்றால் கூட அந்த படத்திற்கு மக்கள் வரவேற்பு தருவார்கள்.

தமிழ் சினிமாவில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களுக்கு பெரிய விளம்பரமே தேவையில்லை மக்களே அவற்றை விளம்பரம் செய்வார்கள். அப்படி விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சிறை திரைப்படம் வெறும் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு சுமார் 31 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த ஆண்டில் ஓடிடி-யில் சக்கை போடு போடும் க்ரைம் த்ரில்லராகவும் சிறை உருவெடுத்துள்ளது.

ரூ.3 கோடி முதலீட்டில் ரூ.30 கோடி லாபம்.. விக்ரம் பிரபு செய்த தரமான சம்பவம்..!!

கடந்த டிசம்பர் 25, 2025 அன்று வெளியான ‘சிறை’, ஒரு கோர்ட்ரூம் க்ரைம் த்ரில்லர் திரைப்படம். விக்ரம் பிரபு, எல்.கே.அக்ஷய் குமார் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம், பெரிய பிரமோஷன்கள் எதுவும் இல்லாமல் தான் தியேட்டர்களில் வெளியானது. ரசிகர்களின் பாசிடிவான விமர்சனங்கள் மூலம் மெல்ல மெல்ல மக்களை சென்றடைந்து, ஓடிடி தளத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது.

டானாக்காரன் படத்தில் விக்ரம் பிரபுவை வைத்து இயக்கிய சுரேஷ் ராஜகுமாரி தான் இந்த படத்தையும் இயக்கினார். இந்த படத்தில் வரும் நீலோத்தி பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தின் தயாரிப்பு செலவு மற்றும் வசூல் விகிதம் ஆச்சர்யம் தரும் வகையில் உள்ளது. இந்த படமே மொத்தமாக 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தான் தயாரிக்கப்பட்டது. பல்வேறு தளங்கள் வெளியிடும் தகவலின் படி இந்த படம் உலகளவில் 31.58 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.

படத்திற்காக செய்த முதலீடு 3 கோடி ரூபாய் தான் ஆனால் அதில் கிடைத்த லாபம் சுமார் 31 கோடி ரூபாய். குறைந்த பட்ஜெட்டில் உருவாகி, வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்ற தமிழ் படங்களில் ஒன்றாக சிறை படம் இடம்பெற்றுள்ளது. படம் முழுவதும் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே வரவைக்கும் வகையில் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை , வழக்கமான கமர்ஷியல் மசாலா படங்களை விட, கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது உள்ளிட்டவையே படத்தின் வெற்றிக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இந்த படம் ZEE5 ஓடிடி தளத்தில் தற்போதும் பார்க்கலாம்.பெரிய பட்ஜெட் படங்களுக்கு போட்டியாக, ஒரு நல்ல கதை இருந்தால் எந்த படமும் வெற்றி பெறும் என்பதற்கு ‘சிறை’ திரைப்படம் மிகச்சிறந்த உதாரணம் என சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Share This Article

English summary

Vikram Prabhu’s Sirai Turns into a Low-Budget Box Office Winner with Massive Returns

ரூ.3 கோடி முதலீட்டில் ரூ.30 கோடி லாபம்.. விக்ரம் பிரபு செய்த தரமான சம்பவம்..!!- Vikram Prabhu’s Sirai has emerged as a strong example of content-driven Tamil cinema, reportedly made on a modest budget and earning several times its cost through theatrical and OTT buzz.

Story first published: Sunday, August 2, 2026, 10:30 [IST]

Other articles published on Aug 2, 2026

Read More

Previous Post

நடுக்கடலில் அலறிய 271 பேர்.. பற்றி எரிந்த இந்தோனேசிய கப்பல்.. நெஞ்சை உறைய வைக்கும் விபத்து | Indonesia Ferry Fire: 5 Dead, 41 Missing After Passenger Ship Catches Fire Near Madura Island

Next Post

ஐ.நா. அகதிகள் ஆணைய அலுவலகத்திற்கு வெளியே ரோஹிங்கியா அகதிகள் கைது செய்யப்படவில்லை; கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் | Makkal Osai

Next Post
ஐ.நா. அகதிகள் ஆணைய அலுவலகத்திற்கு வெளியே ரோஹிங்கியா அகதிகள் கைது செய்யப்படவில்லை; கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் | Makkal Osai

ஐ.நா. அகதிகள் ஆணைய அலுவலகத்திற்கு வெளியே ரோஹிங்கியா அகதிகள் கைது செய்யப்படவில்லை; கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin