Last Updated:
எதிரி நாடுகள் நமது நாட்டின் எதிர்காலமான இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சிறிது நேரத்திற்கு மட்டுமே போதையை தரும் போதைப் பொருள்கள், ஒட்டுமொத்த வாழ்க்கையையும் சீரழித்துவிடும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
போதைப் பொருளுக்கு எதிரான தேசிய அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சியை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அப்போது பேசிய பிரதமர் எதிரி நாடுகள் நமது நாட்டின் எதிர்காலமான இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் போதை அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வருபவர்களை சமூகம் ஒதுக்கி வைக்காமல், அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பளித்து மதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நாடு முழுவதும் 100 வாரங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் 1 கோடி இளைஞர்கள் பங்கேற்புடன் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
Delhi,Delhi,Delhi


