2024 ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய கையோடு, தனது நீண்ட நாள் காதலியையும் வெங்கடேஷ் ஐயர் கரம் பிடித்துள்ளார்.
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் வெங்கடேஷ் ஐயர். பேட்டிங்கில் அதிரடியாகவும், பந்துவீச்சில் சில முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்திய வெங்கடேஷ் ஐயர், சில முக்கிய தருணங்களில் சொதப்பியதால், இந்திய அணியில் தனக்கான இடத்தை தக்கவைக்க தவறிவிட்டார்.
ஆனாலும், 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் பங்கேற்றிருந்த வெங்கடேஷ் ஐயர், அந்த அணி கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார். பல முக்கிய தருணங்களில் ரன் அடித்தும், விக்கெட்டுகளை வீழ்த்தியும் அணியின் வெற்றிக்கு வித்திட்ட வெங்கடேஷ் ஐயர், 14 போட்டிகளில் 370 ரன்கள் எடுத்தார். அதில் 4 அரை சதங்களும் அடங்கும்.
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான இறுதிப் போட்டியில் வெங்கடேஷ் ஐயரின் அதிரடி ஆட்டத்தால்தான் கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி மிரள வைத்தது. கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இருந்த வெங்கடேஷ் ஐயர், தற்போது தனது நீண்டநாள் காதலியான சுருதி ரங்கநாதன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்திற்கு சக வீரர் வருண் சக்கரவர்த்தி, விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர்.
இதையும் படிங்க:
மக்களவைத் தேர்தல் முடிவுகள் – சத்யபிரதா சாஹூ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
வெங்கடேஷ் ஐயர் கடந்த ஆண்டு தெலுங்கு நடிகை ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக வதந்திகள் பரவி வந்த நிலையில், அவை எல்லாம் பொய் என்று கூறும் வகையில், தனது காதலி சுருதியை பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். பேஷன் மேனேஜ்மெண்டில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள சுருதி, தற்போது பெங்களூருவில் உள்ள லைஃப் ஸ்டைல் இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
வெங்கடேஷ் ஐயர் தற்போது இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில், அவரது திருமணம் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
