கனடாவில், கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை முத்தமிட்டுத் தந்தை பேசியதைக் கேட்டு, கருவில் இருந்த குழந்தை புன்னகைத்த விசித்திரமான மற்றும் அழகான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒண்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த லியா ஒலிவேரா என்ற கர்ப்பிணிப் பெண், கடந்த ஜூலை 25 ஆம் திகதி அல்ட்ராசவுண்ட் (Ultrasound) ஸ்கேன் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது அவரது கணவர் லியாவின் வயிற்றை மென்மையாக முத்தமிட்டு, “காலை வணக்கம்” எனக் குழந்தையிடம் பேசினார். தந்தையின் குரல் கேட்ட அடுத்த கணமே, ஸ்கேன் திரையில் தெரிந்த குழந்தையின் முகம் பளிச்சென்று புன்னகையாக மாறியது.
இந்த எதிர்பாராத தருணத்தைக்குடும்பத்தினர் வீடியோவாகப் பதிவு செய்தனர். குழந்தையின் இந்த அழகான எதிர்வினையைக் கண்டு மருத்துவப் பணியாளர்களும் குடும்பத்தினரும் ஆனந்தக் கண்ணீர் விட்டு நெகிழ்ந்தனர்.
கர்ப்பகாலத்தின் பிந்தைய மாதங்களில் கருவில் இருக்கும் குழந்தைகளுக்குப் பெற்றோரின் குரல்களைக் கேட்டு அடையாளம் காணும் இயல்பான திறன் உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது உலகம் முழுவதும் பலரின் இதயங்களை வென்று ட்ரெண்டாகி வருகிறது.


