• Login
Sunday, August 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஓ.டி.டி.யில் வெளியாகும் விஜய் ஆண்டனியின் “நூறு சாமி” திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்? …

GenevaTimes by GenevaTimes
August 2, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘நூறு சாமி’ திரைப்படம் ஆகஸ்ட் 7ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கெண்டு “சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்” உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதிலும் குறிப்பாக இயக்குனர் சசி, விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் விஜய் ஆண்டனியை ஹீரோவாக பிரபலமாக்கியது. இப்படத்தில் இடம்பெற்ற ‘நூறு சாமிகள் இருந்தாலும்’ பாடல் இன்றும் கேட்கப்பட்டு வரும் ஹிட் பாடல்களில் ஒன்றாகவே இருக்கிறது. இக்கூட்டணியில் புதிய திரைப்படம் உருவானது. இதுவும் உணர்வுப்பூர்வமாகவே எழுதப்பட்டுள்ளதால், படத்திற்கு, ‘நூறு சாமி’ எனப் பெயரிடப்பட்டது.

‘நூறு சாமி’ என்ற படத்தின் மூலம் ‘பிச்சைக்காரன்’ பட கூட்டணி மீண்டும் இணைந்தது. இப்படத்தில், விஜய் ஆண்டனி உடன் இணைந்து அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘நூறு சாமி’ படம் கடந்த ஜூன் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷன் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்து இருந்தனர். கணவனை இழந்த பெண்ணாகவும் இரண்டு மகன்களின் அம்மாவாகவும் சிறப்பான நடிப்பை சுவாசிகா வழங்கியிருந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, கணவனை இழந்த பெண்ணை மையப்படுத்தி உணர்வுப்பூர்வமாக இந்தப் படம் எடுக்கப்பட்டது. ‘நூறு சாமி’ திரைப்படம் ரூ. 16 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘நூறு சாமி’ திரைப்படத்தின் சாட்டிலைட் (தொலைக்காட்சி) மற்றும் டிஜிட்டல் (ஓடிடி) உரிமைகளை ஜீ நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், ‘நூறு சாமி’ திரைப்படம் ஆகஸ்ட் 7ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஓ.டி.டி.யில் வெளியாகும் விஜய் ஆண்டனியின் “நூறு சாமி” திரைப்படம்… எதில், எப்போது பார்க்கலாம்? … appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

ஏடிஎம்-ல்‌ தங்க நகை வருமா?? சிவகார்த்திகேயன் சொல்வது இதைதானா?? | Why Kalyan Jewellers Launched the ‘ATM’ Brand in Tamil Nadu

Next Post

பன்னாட்டுக்குற்றங்கள் நூலின் எழுத்தாளர் விசாரணைக்கு அழைப்பு…!

Next Post
பன்னாட்டுக்குற்றங்கள் நூலின் எழுத்தாளர் விசாரணைக்கு அழைப்பு…!

பன்னாட்டுக்குற்றங்கள் நூலின் எழுத்தாளர் விசாரணைக்கு அழைப்பு...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin