விஜயநகரம் ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் புதிய சர்வதேச விமான நிலையம் ஒன்றை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.
ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் போகபுரம் பகுதியில் அமைந்த சர்வதேச விமான நிலையம் பிரதமர் மோடியால் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், ரூ.17,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து உள்ளார். இதன்பின்னர் கர்நாடகாவின் மைசூரு நகரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் நடக்க உள்ள நிகழ்ச்சியில், விவேக ஸ்மராக என்ற சுவாமி விவேகானந்த கலாசார மையம் ஒன்றையும் அவர் திறந்து வைக்க உள்ளார்.
60 லட்சம் பயணிகள்
தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்று அவர் உரையாற்றுவார். ரூ.5,640 கோடி மதிப்பில் அரசு மற்றும் தனியார் அமைப்பு கூட்டாக இணைந்து, ஆண்டுக்கு 60 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் பசுமைவெளி தரத்துடன் இந்த விமான நிலையம் உருவாகி உள்ளது.
இதனால் ஆந்திர பிரதேசத்தில் சுற்றுலா, வர்த்தகம், முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உற்பத்தி ஊக்குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



