DMart நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்டம்.. ஆரம்பமே 20% டிஸ்கவுன்ட் கொடுக்கும் புது கடை!
இந்திய மக்களுக்கு மிகவும் பிடித்த கடையாக மாறியிருக்கும் டிமார்ட் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து மற்ற சூப்பர்மார்கெட் கடைகளுக்கு பெரிய தலைவலியை கொடுத்து வருகிறது. இப்படி இந்தியா முழுவதும் கலக்கி வரும் டிமார்ட் தனது அடுத்த வர்த்தக திட்டத்தை அறிமுகம் செய்து மக்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஆம், டி மார்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் மளிகை பொருட்கள், உணவு பொருட்கள், விளையாட்டு பொருட்கள், ஆடைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை தாண்டி புதிதாக பார்மசி துறையில் இறங்க முடிவு செய்துள்ளது.

இதற்காக அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் தனி நிறுவனத்தை Reflect Healthcare and Retail Private Limited (RHRPL) என்னும் நிறுவனத்தை ஹித்தேஷ் ஷா என்பவரின் தலைமையில் இயங்கி வருகிறது.
தற்போது டிமார்ட் தனது பார்மசி கடைகளை மும்பை பெரு நகரங்களில் மட்டுமே வைத்து இயங்கி வருகிறது, இக்கடைகளில் தனது மளிகை பொருட்கள் விற்பனை கொடுத்த அதிரடியான சலுகைகளை போலவே 20 சதவீதம் என்ற தள்ளுபடி உடன் வர்த்தகத்தை சோதனை முறையில் செய்து வருகிறது.
இந்த சோதனையை கடந்த 2 ஆண்டுகளாக மிகவும் அமைதியான வழியில் செய்து வரும் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் 2025ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை காட்டிலும் 4 மடங்கு அதிக வருமான 12.92 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. 2026ஆம் ஆண்டு தரவுக்கள் கிடைக்கவில்லை.
டிமார்ட் அதிகப்படியான டிஸ்கவுன்ட் கொடுக்கும் காரணத்தால் மருந்து விற்பனையில் பெருமளவிலான லாபத்தை இழக்க நேரிடும் என இத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்தாக தற்போது பல நிறுவனங்கள் ஆன்லைன் பார்மசி சேவைகளை அளித்து வரும் வேளையில் டிமார்ட்-ன் வருகை இவர்களின் வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும். காரணம் ஆன்லைன் பார்மசி நிறுவனங்கள் ஹோம் டெலிவரிக்காக பெரிய அளவிலான முதலீட்டை செய்துள்ளது, டிமார்ட் 20 சதவீதம் வரையில் தள்ளுபடி கொடுத்தால் மாதம் மாதம் பெரும் தொகைக்கு மருந்து வாங்கும் நபர்கள் நேரடியாக டிமார்ட்-க்கு செல்வார்கள்.
டிமார்ட் தற்போது மும்பையில் தனது கடைகளின் ஒரு பகுதியாக இந்த பார்மசி வர்த்தகத்தை இயங்கி வருகிறது, இதற்காக தனி கடைகளை உருவாக்காமல் இத்தகைய மாடலை கொண்டு வந்தது மூலம் கூடுதல் செலவுகள் தவிர்க்கப்பட்டு உள்ளது.
கடந்த 2 வருட சோதனையில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டு உள்ளதை அதன் நஷ்ட அளவீடுகள் காட்டுகிறது. ஆயினும் 2026 நிதியாண்டில் இதன் நிலைமை என்னவென்று தெரியாத விலையில் டிமார்ட் தனது பார்மசி வர்த்தகத்தை தொடர்ந்து விரிவாக்கம் செய்யுமா என்பது அடுத்த முக்கிய கேள்வியாக உள்ளது.
சமீபத்தில் டிமார்ட் பீட்சா கடைகளை திறந்தது பெரும் லாபத்தை கொடுத்து வருகிறது, இதேபோல் பார்மசி பிரிவையும் லாபகரமாகும் வரையில் தொடர்ந்து மறுசீரமைப்பு செய்து நிலையான லாபம் அடைகிறது என்பதை உறுதி செய்த பின்பு அடுத்தக்கட்ட விரிவாக்க பணிகளை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

