அதேபோன்று, நீண்டகாலக் கடனாக தக்கவைத்துக் கொள்பவர்களுக்கு, பணவீக்கம் சாதகமாகவே செயல்படுகிறது. உதாரணத்திற்கு, ₹1 கோடி வீட்டுக் கடனை 20 ஆண்டுகள் தவணையில் எடுத்தால் மாதத் தவணை சுமார் ரூ. ஒரு லட்சமாக இருக்கும். ஆனால், அதே கடனை 30 ஆண்டுகளுக்குப் பிரித்தால் மாதத் தவணை ₹75,000 ஆகக் குறைகிறது. பணவீக்கத்தின் காரணமாக, 30-ஆவது ஆண்டில் நாம் செலுத்தும் ₹75,000 மாதத் தவணையின் அன்றைய உண்மையான மதிப்பு (Net Present Value), இன்றைய காலகட்டத்தின் ₹38,000-க்குச் சமமானதாகும். எனவே, காலம் செல்லச் செல்ல பணவீக்கத்தால் கடனின் உண்மையான சுமை குறைவதாக தெரிவிக்கிறார்.

