Last Updated:
கபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு. காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.
கர்நாடகா மாநிலம் கபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 3500 கனஅடி வீதம் நீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதனால் கர்நாடக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே, நாளை நடைபெறவுள்ள கர்நாடகா அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முன்னிட்டு, பெங்களூருவில் முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையில் நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், காவிரி நீர் தொடர்பாக கடையடைப்பு போராட்டத்தை கைவிட வேண்டுமென கேட்டுக் கொண்டார். கர்நாடகாவில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தண்ணீரை நாம் கட்டுப்படுத்தி வைக்க நினைத்தால் நம்மை அது அடித்து சென்றுவிடும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்த சில நிமிடங்களில் கர்நாடகா மாநிலம் கபினி அணைியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுள்ளது. கபினி அணையில் இருந்து 10,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணைக்கு விநாடிக்கு 15,565 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர் தமிழ்நாட்டில் எல்லைக்கு வரும் திங்கள் கிழமை வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


