• Login
Saturday, August 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வருகிறார் சீன அதிபர் ஸீ ஜின்பிங்!! அடித்தளம் போடும் பிரிக்ஸ் மாநாடு!! | Xi Jinping Likely to Visit India for BRICS Summit, First Trip Since Galwan Standoff

GenevaTimes by GenevaTimes
August 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வருகிறார் சீன அதிபர் ஸீ ஜின்பிங்!! அடித்தளம் போடும் பிரிக்ஸ் மாநாடு!! | Xi Jinping Likely to Visit India for BRICS Summit, First Trip Since Galwan Standoff
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வருகிறார் சீன அதிபர் ஸீ ஜின்பிங்!! அடித்தளம் போடும் பிரிக்ஸ் மாநாடு!!

இந்தியாவும் சீனாவும் ஆசிய கண்டத்தில் மிகப்பெரிய பொருளாதார நாடுகள். சீனாவை பொறுத்தவரை இந்தியாவுடன் நட்புறவு என கூறும் ஆனால் எல்லையில் அவ்வப்போது குடைச்சலும் கொடுக்கும். இதனால் அவ்வப்போது இந்தியா – சீனா உறவில் விரிசல் ஏற்படுவது உண்டு. கடந்த 6 ஆண்டுகளாக விழுந்த பெரிய விரிசலை ஒட்ட வைக்கும் வகையில் கடந்த ஆண்டு பிரதமர் மோடி சீனா சென்றார்.

பிரதமர் மோடியின் சீன பயணத்தை தொடர்ந்து இரு நாடுகளின் உறவு புதுப்பிக்கப்பட்டது. அந்த வகையில் சீன அதிபர் ஸீ ஜின்பிங் இந்தியா வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஜின்பிங் நேரில் கலந்துகொள்ள அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உறுதி செய்யப்பட்டால், 2020ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு, சீன அதிபர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாக அமையும்.

7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வருகிறார் சீன அதிபர் ஸீ ஜின்பிங்!! அடித்தளம் போடும் பிரிக்ஸ் மாநாடு!!

கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 2020ஆம் ஆண்டு இந்தியா மற்றும் சீனா இடையே தூதரக உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. இத்தகைய சூழலில், ஸீ ஜின்பிங்கின் இந்த வருகை இரு நாடுகளின் உறவில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கியது தான் பிரிக்ஸ் அமைப்பு.

பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு, சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. வளர்ந்து வரும் பொருளாதாரங்களை கொண்ட நாடுகள் இடம்பெற்றுள்ளதால் உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு அமைப்பாக பிரிக்ஸ் உள்ளது. இந்த மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்குவது, சர்வதேச அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும்.

அந்த வகையில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு நடக்கிறது. இதில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். அந்த வகையில் தான் சீன அதிபருக்கு இந்தியாவில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் வருகை தருவது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் அவர் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்றே சொல்லப்படுகிறது.

எல்லை விவகாரங்கள் ஒருபுறம் இருந்தாலும், பிரிக்ஸ் அமைப்பின் கீழ் வர்த்தகம், முதலீடு மற்றும் உலகளாவிய விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். அதே போல அமெரிக்காவின் வரி விதிப்பு பிரசினைகளையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஸீ ஜின்பிங் வருகை உறுதி செய்யப்பட்டால், பிரதமர் நரேந்திர மோடிக்கும் சீன அதிபர் ஜின்பிங்கிற்கும் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். இது உலகமே உற்றுநோக்கும் ஒரு சந்திப்பாக இருக்கும். குறொப்பாக அமெரிக்காவின் பார்வை முழுவதுமே இந்த சந்திப்பின் மீது தான் இருக்கும்.

முன்னதாக 2019ஆம் ஆண்டில் சீன அதிபர் இந்தியா வந்திருந்தார். அப்போது மாமல்லபுரத்தில் மோடியும் – ஜின் பிங்கும் சந்தித்து கலந்துரையாடினர். இந்த முறை சீன அதிபர் வந்தாலும் டெல்லியுடனே பயணத்தை முடித்து கொள்வார் என சொல்லப்படுகிறது. பிரிக்ஸ் அமைப்பில் ரஷ்யாவும் இடம்பெற்றிருப்பதால் ரஷ்ய அதிபர் புதினும் வருகை தர வாய்ப்புள்ளது.

Share This Article

English summary

Xi Jinping Likely to Visit India for BRICS Summit, First Trip Since Galwan Standoff

7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வருகிறார் சீன அதிபர் ஸீ ஜின்பிங்!! அடித்தளம் போடும் பிரிக்ஸ் மாநாடு!! – Chinese President Xi Jinping is likely to visit India in September to attend the BRICS Summit in New Delhi, marking his first visit since the 2020 Galwan Valley clash. The visit, if confirmed, could become a major diplomatic moment for India-China relations and the wider BRICS agenda.

Story first published: Friday, July 31, 2026, 15:54 [IST]

Other articles published on Jul 31, 2026

Read More

Previous Post

ஈரான் விமான நிறுவனத்திற்கு முகவராக செயற்பட்ட இந்திய நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை!

Next Post

பேருந்து மோதி இந்திய மாது பலி | Makkal Osai

Next Post
பேருந்து மோதி இந்திய மாது பலி | Makkal Osai

பேருந்து மோதி இந்திய மாது பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin