• Login
Friday, July 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

6.82 லட்சம் கார்களை விற்றும்.. லாபம் குறைவு! மாருதி நிறுவனத்திற்கே இந்த நிலைமையா? | Maruti Q1 Profit Falls 9-11% Despite Record 6.82 Lakh Car Sales as Iran War, Input Costs Bite

GenevaTimes by GenevaTimes
July 31, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
6.82 லட்சம் கார்களை விற்றும்.. லாபம் குறைவு! மாருதி நிறுவனத்திற்கே இந்த நிலைமையா? | Maruti Q1 Profit Falls 9-11% Despite Record 6.82 Lakh Car Sales as Iran War, Input Costs Bite
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Business

oi-Halley Karthik

Time
Published: Friday, July 31, 2026, 20:54 [IST]

சென்னை: ஆட்டோமொபைல் துறையில் மாருதி நிறுவனத்திற்கு என தனி இடம் இருக்கிறது. இவ்வளவு கெத்தாக இருக்கும் இந்த நிறுவனம் நடப்பாண்டின் முதல் காலண்டில் தனது லாபத்தில் 11% சதவிகிதத்தை இழந்திருக்கிறது. மாருதிக்கே இந்த நிலைமை எனில்.. மற்ற நிறுவனங்களில் நிலை என்ன? இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை எப்படி இருக்கிறது? என்கிற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

மாருதி நிறுவனம், ஜப்பானின் சுசுகியுடன் இணைந்து, இந்தியாவில் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. சுசுகி நிறுவனத்தின் 58%க்கும் அதிகமான பங்குகளை மாருதி வைத்திருக்கிறது. இப்படியாக இந்த ஆண்டு மட்டும் சுமார் 6.82லட்சத்திற்கும் அதிகமான கார்களை மாருதி விற்பனை செய்திருக்கிறது.

Maruti

சேல்ஸ் பலமாக இருந்தும் கூட, கம்பெனியின் லாபம் 11% அடிவாங்கியிருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டின் முதல் காலாண்டில் லாபம் ரூ.3758 கோடியிலிருந்து ரூ.3352 கோடியாக குறைந்திருக்கிறது. இந்த சரிவுக்கு காரணம் ஈரான் போர்தான். அட ஆமாங்க.. நம்ம டிரம்ப் ஈரான் மேல ஒரு குண்டு போட்டா கூட.. இந்திய ஆட்டோமொபைல் துறை ஆட்டம் காணும்.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த.. அமெரிக்காவை பழிவாங்க ஈரான், ஹார்முஸ் கடல் பகுதியை தனது கன்ட்ரோலில் எடுக்க.. சரக்கு கப்பல்களின் பயணம் பாதிக்கப்பட்டிருக்கிறது. டைமுக்கு சரக்கு வராததால்.. கார் உற்பத்திக்கு தேவையான எஃகு, அலுமினியம், பிளாஸ்டிக், ரப்பர் உள்ளிட்டவற்றின் விலை இஷ்டத்துக்கு எகிறியிருக்கிறது. இதனால், மூலப்பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே ஆண்டுக்கு 45.9% அளவுக்கு மாருதி நிறுவனம் கை காசை இறைக்கிறது. இதுதான் லாபம் குறைந்ததற்கு காரணம்.

இருந்தாலும், இதையெல்லாம் காரணம் சொல்லி.. கார் உற்பத்திய நிறுத்த முடியுமா என்ன? எனவே செலவுகளை பொறுப்பேற்றுக்கொண்டு நிறுவனம் உற்பத்தியை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இப்படி சமாளித்ததால், லாபம் குறைந்தாலும் வருவாய் அதிகரித்திருக்கிறது. நிறுவனத்தின் ஆண்டு நிகர வருவாய் இந்த முறை 36% அதிகரித்து ரூ.49,959 கோடி எட்டியுள்ளது. அதேபோல மொத்த வாகன உற்பத்தி 29.3% உயர்ந்திருக்கிறது.

சிறிய கார்கள் 34.1%
எஸ்யூவி கார்கள் 44.6%
ஏற்றுமதி 28.6%

என விற்பனை கொடி கட்டி பறந்திருக்கிறது. இதன் காரணமாக இந்நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர் 2.3% அதிகரித்து 41.2% ஆக அதிகரித்திருக்கிறது. ஹரியானாவின் கர்கோடாவில் அமைக்கப்பட்ட புதிய உற்பத்தி ஆலையே இந்த விற்பனை உயர்வுக்கு காரணமாகும்.

இவ்வளவு பஞ்சாயத்துகளுக்கு மத்தியிலும், பயோ-கேஸ் தயாரிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் ரூ.561 கோடி நிதியில் 4 கம்ப்ரஸ்டு பயோகேஸ் திட்டங்களை முதற்கட்டமாக செயல்படுத்த நிறுவனம் ஒப்புதல் அளித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary

Maruti: Maruti holds a distinctive position in the automobile sector. Yet, this formidable company has seen an 11% drop in profits during the first quarter of the current year. If Maruti is facing such a situation, one naturally wonders: what is the state of other companies? What is the overall condition of the automobile industry in India?

Read More

Previous Post

ஒப்பந்தம் குறித்த இஸ்ரேலின் முதல் கருத்து! காசா மீது திரும்பும் உலகத்தின் கவனம்

Next Post

ஆடிப்பட்ட விதைகள் முதல் இயற்கை உணவுகள் வரை… மதுரையில் நாளை பிரம்மாண்ட விதை திருவிழா | Agriculture Stories Photogallery (வேளாண்மை போட்டோகேலரி)

Next Post
ஆடிப்பட்ட விதைகள் முதல் இயற்கை உணவுகள் வரை… மதுரையில் நாளை பிரம்மாண்ட விதை திருவிழா | Agriculture Stories Photogallery (வேளாண்மை போட்டோகேலரி)

ஆடிப்பட்ட விதைகள் முதல் இயற்கை உணவுகள் வரை... மதுரையில் நாளை பிரம்மாண்ட விதை திருவிழா | Agriculture Stories Photogallery (வேளாண்மை போட்டோகேலரி)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin