Last Updated:
Dk Shivakumar | தமிழ்நாட்டுக்கு 4.5 டிஎம்சி நீர் அதாவது வினாடிக்கு 3500 கன அடி வீதம் 15 நாட்கள் நீர் திறக்க கர்நாடகாவிற்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
காவிரி மேலாண்மை பிரச்சனை வெடித்து வரும் நிலையில் கர்நாடக முதலமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான விவகாரம், இரு மாநிலங்களுக்கு நடுவில் பூதாகரமாகியிருக்கிறது. அணை கட்ட தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கர்நாடகா அனுமதி கேட்கத் தேவையில்லை என்ற மத்திய இணை அமைச்சரின் பதிலும், விவசாயிகளின் கோரிக்கையும் இரு மாநில எல்லைகளில் பதற்றமான சூழலை உருவாக்கியிருக்கிறது. இதற்கிடையில், காவிரி நீர் வரத்தின்றி டெல்டா விவசாயிகள் கடும் சோகத்தில் இருக்கின்றனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், இன்று காலையில் கர்நாடக முதலமைச்சர் டிகே சிவக்குமார் உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளோம் என்றும், கர்நாடகாவால் ஏன் தண்ணீர் திறக்க இயலவில்லை என்பதை தீர்ப்பாயத்திடம் எடுத்துரைத்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைக்கு ஹாரங்கியில் 95%, கபிணியில் 83%, கேஆர் எஸ்-ல் 36%, ஹேமாவதியில் 61% நீர் இருப்பு உள்ளது. மத்திய அரசு, தமிழ்நாடு அரசு வாரிய அதிகாரிகள் யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் என்றும் மேல்முறையீடு செய்வதற்கு முன்பாக அனைத்து கட்சி எம்.பிக்களின் கூட்டத்தை கூட்டியுள்ளோம். மத்த்ய அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடமும் கர்நாடகத்தின் நிலைமையை எடுத்துரைத்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழக முதலமைச்சரும் நானும் அவரவர் மாநில நாளில் அக்கரையில் கவனமாக உள்ளோம் என்பதை உறுதிப்படுத்தினார்.
தமிழ்நாட்டுக்கு 4.5 டிஎம்சி நீர் அதாவது வினாடிக்கு 3500 கன அடி வீதம் 15 நாட்கள் நீர் திறக்க கர்நாடகாவிற்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


