எனவே, மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகள், தங்கம், நிலம், குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கான சேமிப்புகளை இந்த இரண்டாம் பிரிவில் மேற்கொள்ளலாம். சந்தை நிலவரப்படி, மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் தோறும் தோராயமாக ₹31,000 கோடி முதல் ₹32,000 கோடி வரை முதலீடு செய்யப்படுகிறது . உதாரணமாக, மார்ச் 2026-இல் SIP முதலீடு ₹32,087 கோடியாகவும், ஜூன் 2026-இல் ₹31,781 கோடியாகவும் உள்ளது. இது 2019 கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததை விட நான்கு மடங்கு அதிகமாகும். அதேபோல், கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கம் விலை பல மடங்கு உயர்ந்து முதலீட்டுக்கான சொத்தாக மாறியுள்ளதாக தெரிவித்தார்.


