Last Updated:
நிஃப்டி 50 குறியீட்டில் Mahindra & Mahindra, Coal India, Eicher Motors, Maruti Suzuki, Tata Motors Passenger Vehicles ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிகபட்சமாக 2 சதவீதம் வரை உயர்ந்தன.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்தது.
சர்வதேச பொருளாதாரம், அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு ஆகியவற்றை பொறுத்து தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் விலை 75 ரூபாய் உயர்ந்து 13 ஆயிரத்து 230 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் விலை மாற்றமின்றி கிராம் 235 ரூபாய்க்கும், பார் வெள்ளி கிலோ 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
இதற்கிடையே, இந்திய பங்குச்சந்தைகள் 2ஆவது வர்த்தக நாளாக ஏற்றம் கண்டன. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 273 புள்ளிகள் அதிகரித்து 77 ஆயிரத்து 928 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 66 புள்ளிகள் அதிகரித்து 24 ஆயிரத்து 317 புள்ளிகளுடனும் நிலைபெற்றன. குறிப்பாக, நிஃப்டி 50 குறியீட்டில் Mahindra & Mahindra, Coal India, Eicher Motors, Maruti Suzuki, Tata Motors Passenger Vehicles ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிகபட்சமாக 2 சதவீதம் வரை உயர்ந்தன.


