Cricket
oi-Yogeshwaran Moorthi
சென்னை: சிஎஸ்கே அணியின் இளம் வீரரான ஆயுஷ் மாத்ரேவை டிரேட்டில் கொடுக்க எந்த அணியும் வர வேண்டாம் என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் கூறிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. ஆயுஷ் மாத்ரேவை சிஎஸ்கே அணி தங்களின் எதிர்காலமாக பார்க்கிறது என்பதும் இதன் முழுவதும் தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் நடக்க உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே டிரேட் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. குறிப்பாக மும்பை அணி நிர்வாகம் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்ய தீவிரமாக உள்ளது. திலக் வர்மாவை கேப்டனாக கொண்டு வந்துவிட்டு, மும்பை அணியை புதிதாக கட்டமைக்க ஆகாஷ் அம்பானி தயாராகிவிட்டார்.

இதனால் ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்தால், அவருக்கு நிகரான இந்திய இளம் வீரர்களை மும்பை அணிக்குள் கொண்டு வர முடியும். இதனால் ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்யும் முடிவுக்கு மும்பை அணி வந்துள்ளது. இன்னொரு பக்கம் ஹர்திக் பாண்டியாவை வாங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் மும்முரமாக இருக்கிறது. அதற்கு நிகரான ஒரு வீரரையும் மும்பை அணி எதிர்பார்க்கிறது.
இதில் சிவம் துபே மற்றும் ஆயுஷ் மாத்ரேவை சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் மும்பை அணி நிர்வாகம் நேரடியாகவே கேட்டுள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் ஆயுஷ் மாத்ரேவை டிரேட் செய்ய வேண்டும் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று கூறி இருக்கிறது. 17 வயதாகும் ஆயுஷ் மாத்ரே அண்மையில் உலகக்கோப்பை வென்ற யு19 இந்திய அணியை வழிநடத்தி இருந்தார்.
அதேபோல் ஐபிஎல் தொடரிலும் ஆயுஷ் மாத்ரே ஆட்டம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. பவுண்டரி அடிப்பதில் கில்லியாக இருக்கும் ஆயுஷ் மாத்ரேவை மும்பை ரசிகர்களும் குட்டி ஹிட்மேன் என்று அழைக்க தொடங்கி இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு பின் சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக ஆயுஷ் மாத்ரேவை வளர்க்க சென்னை அணி நிர்வாகம் தீவிரமாக உள்ளது.
இதனால் எந்த அணியாக இருந்தாலும் ஆயுஷ் மாத்ரேவை டீலுக்குள் கொண்டு வர வேண்டாம் என்று சிஎஸ்கே நிர்வாகம் கூறி இருக்கிறது. இதனால் மும்பை அணி டிவால்ட் பிரெவிஸ் என்று கேட்க, அதனை சிஎஸ்கே அணி விரும்பவில்லை. பவுலர்கள் யாரையாவது கேளுங்கள் என்று மும்பை அணி நிர்வாகம் கூறியதால், கலீல் அஹ்மத் அல்லது அன்சுல் கம்போஜ் ஆகியோரை கேட்க முன் வந்துள்ளது.

