Last Updated:
கல்லே மற்றும் கொழும்பில் நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடர், 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரின் ஒரு பகுதியாகும்.
இலங்கைக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. இந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டது குறித்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.
தனது யூடியூப் பக்கத்தில் இது குறித்துப் பேசிய ஏபி டி வில்லியர்ஸ், “ரிஷப் பண்ட் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது எனக்குச் சற்று ஆச்சரியமளிக்கிறது. சமீபத்திய ஐ.பி.எல் தொடரில் அவரது தன்னம்பிக்கை மற்றும் எனர்ஜி குறைவாகவே காணப்பட்டது. இருப்பினும், நாட்டுக்காக விளையாடும் போது அவர் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன். களத்தில் அவரது தீவிரமான ஆட்டத்தைப் பார்க்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா அணியில் இணைந்திருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலத்தையும் ஆற்றலையும் தரும் என டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார்.
இளம் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் சாரன்ஷ் ஜெயின் அணியில் இணைந்திருப்பது, இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக கேப்டன் சுப்மன் கில்லுக்கு கூடுதல் பவுலிங் ஆப்ஷன்களை வழங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கல்லே மற்றும் கொழும்பில் நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடர், 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரின் ஒரு பகுதியாகும். தற்போது புள்ளிப்பட்டியலில் இந்தியா 5-வது இடத்திலும், இலங்கை 6-வது இடத்திலும் உள்ளதால், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற இரு அணிகளுக்கும் இத்தொடர் மிகவும் முக்கியமானது.
சுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சாய் சுதர்சன், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவ்தத் படிக்கல், சாரன்ஷ் ஜெயின்.


