பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகளை உற்பத்தி செய்வதற்கான உரிமங்களை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டதாக உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி செவ்வாயன்று (28)தெரிவித்தார்.
ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய ஜெலென்ஸ்கி, இந்த மாத தொடக்கத்தில் துருக்கியின் தலைநகரான அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டின் போது இரு தலைவர்களும் தொடங்கிய கலந்துரையாடல்களை மேலும் வலுப்படுத்தியதாகக் கூறினார்.
பேட்ரியாட் ஏவுகணைகளின் உற்பத்தி
“பேட்ரியாட் ஏவுகணைகளின் உற்பத்திக்காக உக்ரைனுக்கு உரிமங்களை வழங்குவதை நாங்கள் அங்காராவில் தொடங்கினோம்,” என்று ஜெலென்ஸ்கி தெரிவித்தார்..

“இது முக்கியமானது, ஏனென்றால் எங்களுக்கு இன்னும் அதிகமாகவும் விரைவாகவும் தேவைப்படுகிறது.”
வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது ட்ரம்ப் இந்தக் கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.
ஜனாதிபதி ட்ரம்புடன் மிகச் சிறந்த சந்திப்பு
“இன்று, ஜனாதிபதி ட்ரம்புடன் எங்களுக்கு ஒரு மிகச் சிறந்த சந்திப்பு நடைபெற்றது. அவர் எங்களுக்கு உரிமங்களை வழங்குவார் என்பதை ஏற்றுக்கொண்டார்,” என்று ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

பின்னர், சாத்தியமான கூட்டு உற்பத்தி குறித்து விவாதிக்க, முக்கிய அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களின் நிர்வாகிகளைச் சந்தித்ததாக உக்ரைனியத் தலைவர் மேலும் கூறினார்.
“நாம் இணைந்து உற்பத்தி செய்வோம் என்று நம்புகிறேன். இது மிகவும் முக்கியமானது,” என்று அவர் ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவித்தார்.
உக்ரைனின் அவசர வான் பாதுகாப்புத் தேவைகள்
முன்னதாக செவ்வாயன்று, அமெரிக்க தலைநகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெலென்ஸ்கி, உக்ரைனின் அவசர வான் பாதுகாப்புத் தேவைகள் குறித்து ட்ரம்ப் மற்றும் அமெரிக்க செனட்டர்களுடன் விவாதித்ததாகக் கூறினார்.

“உண்மையான பிரச்சினை ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளும் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளும்தான்,” என்று அவர் குறிப்பிட்டார். “நிச்சயமாக, எங்களுக்கு என்ன தேவை என்பதை நான் பகிர்ந்துகொண்டேன்… அதை இன்று ஜனாதிபதியுடன் பகிர்ந்துகொண்டேன்.”
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

