Last Updated:
ODI பேட்டர்கள் தரவரிசையில், நியூசிலாந்தின் டேரில் மிட்செல்லைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் சுப்மன் கில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இன்று வெளியிட்டுள்ள புதிய ரேங்கிங் பட்டியலில், இந்திய அணியின் இளம் மற்றும் மூத்த வீரர்கள் பலரும் தங்களது தரவரிசையில் அதிரடி முன்னேற்றத்தை கண்டுள்ளனர்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான T20 தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. இதில் 151 ரன்கள் குவித்து ‘தொடர் நாயகன்’ விருது வென்ற 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, T20 பேட்டர்களுக்கான தரவரிசையில் ஒரே அடியாக 230 இடங்கள் முன்னேறி, 48-வது இடத்தைப் பிடித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளார்.
இதே T20I பேட்டர்கள் பட்டியலில் இந்திய வீரர் இஷான் கிஷன் 910 புள்ளிகளுடன் உலக அளவில் முதலிடத்தை மீண்டும் உறுதி செய்துள்ளார். இத்தொடரின் போது அவர் 916 ரேட்டிங் புள்ளிகளை எட்டியதன் மூலம், சூர்யகுமார் யாதவ் (912) மற்றும் விராட் கோலி (909) ஆகியோரின் வாழ்நாள் சிறந்த ரேட்டிங் புள்ளிகளை மிஞ்சியுள்ளார்.
இதனிடையே, ஒருநாள் கிரிக்கெட் (ODI) பேட்டர்கள் தரவரிசையில், நியூசிலாந்தின் டேரில் மிட்செல்லைப் பின்னுக்குத் தள்ளி இந்திய நட்சத்திர வீரர் சுப்மன் கில் மீண்டும் உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
T20I பேட்டர்கள் வரிசையில் திலக் வர்மா 6-வது இடத்திற்கும், ஸ்ரேயாஸ் ஐயர் 24-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். அதேபோல், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் 31 இடங்கள் உயர்ந்து 41-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக 5 மெய்டன் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஜஸ்டின் க்ரீவ்ஸ், டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். மேலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் 4 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தைப் பிடித்துள்ளார்.


