• Login
Wednesday, July 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நம்ம வங்கி கணக்குல இப்படி ஒரு விஷயம் நடக்குது தெரியுமா? வங்கிகளுக்கு கொள்ளை லாபம்.. ஆனா நமக்கு..?? | HDFC Bank, Axis Bank Collect Highest Penalties for Minimum Balance Non-Maintenance; SBI Tops PSU List

GenevaTimes by GenevaTimes
July 29, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
நம்ம வங்கி கணக்குல இப்படி ஒரு விஷயம் நடக்குது தெரியுமா? வங்கிகளுக்கு கொள்ளை லாபம்.. ஆனா நமக்கு..?? | HDFC Bank, Axis Bank Collect Highest Penalties for Minimum Balance Non-Maintenance; SBI Tops PSU List
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நம்ம வங்கி கணக்குல இப்படி ஒரு விஷயம் நடக்குது தெரியுமா? வங்கிகளுக்கு கொள்ளை லாபம்.. ஆனா நமக்கு..??

இந்தியாவில் வங்கி கணக்கே இல்லாத நபர் இல்லை என கூறும் அளவுக்கு கோடிக்கணக்கான மக்கள் வங்கி கணக்கு வைத்திருக்கின்றனர். இப்படி வங்கி கணக்கு வைத்திருப்பவர்களிடம் இருந்து வங்கிகள் பெரிய தொகையை வசூல் செய்து வருவாய் பார்த்துள்ளன. பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு இப்படி ஒரு பணம் நம் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது என்பதே தெரிவதில்லை.

நம் நாட்டில் பொது துறை மற்றும் தனியார் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் மாதம் தோறும் ஒரு குறைந்த பட்ச தொகையை மினிமம் பேலன்ஸாக வங்கி கணக்கில் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றன. மினிமம் பேலன்ஸ் தொகையை (Minimum Average Balance – MAB) பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து, வங்கிகள் அபராதம் வசூல் செய்கின்றன. அந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் 26,170 கோடி ரூபாய்க்கும் அதிகமான அபராத தொகையை வங்கிகள் வசூலித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நம்ம வங்கி கணக்குல இப்படி ஒரு விஷயம் நடக்குது தெரியுமா? வங்கிகளுக்கு கொள்ளை லாபம்.. ஆனா நமக்கு..??

மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இந்த தகவல்களை பகிர்ந்துள்ளார். இதன்படி 2025-26 நிதியாண்டில் மட்டும், வங்கிகள் சுமார் 7,086.63 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளன. இதில் தனியார் வங்கிகள் 4,948.71 கோடி ரூபாயும் பொதுத்துறை வங்கிகள் 2,137.92 கோடி ரூபாயும் அபராதமாக வசூலித்துள்ளன. தனியார் வங்கிகள் பொதுத்துறை வங்கிகளை விட இரு மடங்கு அதிகமாக அபராத தொகையை வசூல் செய்திருப்பது தெரிய வருகிறது.

தனியார் வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாததற்காக அபராதம் வசூல் செய்ததில் ஹெச்டிஎஃப்சி வங்கி முதலிடத்தில் உள்ளது. 2025-26 நிதியாண்டில் மட்டும் இந்த வங்கி 1,798.14 கோடி ரூபாயும், ஆக்சிஸ் வங்கி 1,081.33 கோடி ரூபாயும் அபராதமாக வசூலித்துள்ளன. இந்த இரு வங்கிகள் மட்டுமே தனியார் வங்கிகளின் மொத்த அபராத வசூலில் சுமார் 58% பங்கை கொண்டுள்ளன.

நம்ம வங்கி கணக்குல இப்படி ஒரு விஷயம் நடக்குது தெரியுமா? வங்கிகளுக்கு கொள்ளை லாபம்.. ஆனா நமக்கு..??

பொதுத்துறை வங்கிகளில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அதிகபட்சமாக 477.27 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இருப்பினும், இது நடப்பு கணக்குகளில் இருந்து வசூலிக்கப்பட்ட தொகை என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ஏனெனில், எஸ்பிஐ வங்கி தனது சேமிப்பு கணக்குகளுக்கு மார்ச் 2020 முதலே அபராத தொகையை ரத்து செய்துவிட்டது. பொதுத்துறை வங்கிகள் பட்டியலில் பேங்க் ஆஃப் பரோடா ,இந்தியன் வங்கி ஆகியவையும் அதிக அபராத தொகையை வசூல் செய்துள்ளன.

அடிப்படை சேமிப்புக் கணக்குகள் (BSBDA) மற்றும் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட கணக்குகளுக்கு இந்த மினிமம் பேலன்ஸ் அபராதம் விதிக்கப்படுவதில்லை. தற்போது சுமார் 73 கோடிக்கும் அதிகமான இத்தகைய கணக்குகள் அபராதத்திலிருந்து விலக்கு பெற்றுள்ளன.

இந்தியாவில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளில், 10 வங்கிகள் தற்போது சேமிப்பு கணக்குகளுக்கான மினிமம் பேலன்ஸ் அபராத தொகையை முழுமையாக ரத்து செய்துவிட்டன என அரசு தெரிவிக்கிறது. எனவே உங்களிடம் நடப்பு கணக்கு இருக்கிறது அல்லது தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்றால் மினிமம் பேலன்ஸ் எவ்வளவு பராமரிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அந்த தொகையை பராமரித்து கொள்ளுங்கள். இல்லையென்றால் தண்டமாக வங்கிக்கு தான் நம் பணம் அபராதமாக செல்லும்.

Share This Article

English summary

HDFC Bank, Axis Bank Collect Highest Penalties for Minimum Balance Non-Maintenance; SBI Tops PSU List

நம்ம வங்கி கணக்குல இப்படி ஒரு விஷயம் நடக்குது தெரியுமா? வங்கிகளுக்கு லாபம்.. ஆனா நமக்கு..??- HDFC Bank and Axis Bank have emerged as the biggest collectors of minimum average balance penalty charges among private sector banks. The figures highlight how banks continue to earn sizable revenue from MAB penalties even as many PSU banks have moved away from such charges on savings accounts.

Story first published: Wednesday, July 29, 2026, 12:09 [IST]

Other articles published on Jul 29, 2026

Read More

Previous Post

WTC பாயின்ட்ஸ் டேபிள் : 5 ஆவது இடத்தில் இந்திய அணி.. தொடர் தோல்வியால் பாதாளத்தில் பாகிஸ்தான்.. | கிரிக்கெட் செய்திகள்

Next Post

டொனால்டு டிரம்ப் உடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்திப்பு | Makkal Osai

Next Post
டொனால்டு டிரம்ப் உடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்திப்பு | Makkal Osai

டொனால்டு டிரம்ப் உடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்திப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin