Last Updated:
ஆஸ்திரேலியா 87.50 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா (75.00%), நியூசிலாந்து (72.22%) முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025-27) தொடரின் புள்ளிப்பட்டியலில், பாகிஸ்தான் அணி கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டு பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ட்ரினிடாட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் 90 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த அதிர்ச்சித் தோல்வியே இதற்கு முக்கியக் காரணமாகும்.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பாபர் அசாம் போராடி ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் எடுத்த போதிலும், மற்ற பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 – 27 தொடருக்கான பாயின்ட்ஸ் டேபிள் அடிப்படையில், இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4 தோல்விகளுடன், வெறும் 6.67 சதவீத புள்ளிகளுடன் 9 அணிகள் கொண்ட புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் கடைசி இடத்தில் (9-வது இடம்) நீடிக்கிறது.
மறுபுறம், பாகிஸ்தானை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 2-வது வெற்றியைப் பதிவு செய்து 30 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா அணி 87.50 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் வலுவாக உள்ளது. தென்னாப்பிரிக்கா (75.00%) மற்றும் நியூசிலாந்து (72.22%) முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன. வங்கதேச அணி 58.33 சதவீத புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வி மற்றும் 1 டிராவுடன் 48.15 சதவீத புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. இலங்கை (41.67%) மற்றும் இங்கிலாந்து (24.36%) அணிகள் முறையே 6 மற்றும் 7-வது இடங்களில் உள்ளன. பாகிஸ்தான் அணியின் இந்த தொடர் தோல்விகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை மிகவும் கடினமாக்கியுள்ளது.
Jul 29, 2026 12:24 PM IST


