• Login
Thursday, July 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சீனா செய்யுற வேலையை பார்த்தீங்களா? இனி தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை!இப்படியும் ஒரு மாஸ்டர் பிளான்! | China Buys More Gold: June Imports Reach Highest Since March 2024

GenevaTimes by GenevaTimes
July 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சீனா செய்யுற வேலையை பார்த்தீங்களா? இனி தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை!இப்படியும் ஒரு மாஸ்டர் பிளான்! | China Buys More Gold: June Imports Reach Highest Since March 2024
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சீனா செய்யுற வேலையை பார்த்தீங்களா? இனி தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை!இப்படியும் ஒரு மாஸ்டர் பிளான்!

உலகளவில் தங்கத்தை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக சீனா இருக்கிறது. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியது .அதிலிருந்து தற்போது விலை குறைந்திருக்கும் சூழலிலும் சீனா தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது. அங்குள்ள முதலீட்டாளர்களும், மத்திய வங்கியும் போட்டி போட்டுக் கொண்டு தங்க இருப்பை அதிகரித்து வருகின்றனர். ஏன் சீனா தங்கத்தை தீவிரமாக வாங்கி வருகிறது? இதனால் பிற நாடுகளுக்கு என்னென்ன தாக்கங்கள் ஏற்படும்?

இந்தியாவைப் போலவே சீனாவிற்கும் தங்கத்தின் மீது பிரியம் அதிகம். இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கம் வரலாற்று உச்சத்தை எட்டியது. ஆனால் 2026-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் விலை சற்று குறைந்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி சீனா அதிகளவில் தங்க இறக்குமதியில் ஈடுபட்டுள்ளது.

சீனா செய்யுற வேலையை பார்த்தீங்களா? இனி தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை!இப்படியும் ஒரு மாஸ்டர் பிளான்!

சீனாவின் ஜெனரல் அட்மினிஸ்ட்ரேஷன் ஆஃப் கஸ்டம்ஸ் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் ஜூன் மாதத்தில் 173 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதமும் சீனா அதிகளவில் இறக்குமதி செய்தது. ஆனால் இந்த முறை இன்னும் அதிகமான தங்கத்தை வாங்கியுள்ளது.

இந்த புள்ளி விவரங்கள் தொடர்ந்து மூன்றாவது மாதமாக இறக்குமதி அதிகரித்துள்ளதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. 2026-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் சீனா மொத்தமாக 820 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. 2025-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 830 டன் வரையிலான தங்கத்தை சீனா இறக்குமதி செய்துள்ளது.

விலைக் குறைவை கணக்கச்சிதமாக பயன்படுத்தி அங்குள்ள முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கி வருகின்றனர். அதேபோல சீனாவின் சில்லறை வர்த்தகர்களும் தங்கத்தை வாங்கி வருகின்றனர். மக்கள் மத்தியில் தங்கத்திற்கான தேவை அதிகமாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்தும் சில நகைக்கடைகாரர்கள் தங்களின் இருப்பை அதிகரித்து வருகின்றனர்.

விலை குறைந்து வந்தாலும் சீன மக்களுக்கு தங்கத்தின் மீதான நம்பிக்கை மட்டும் குறையவில்லை. இதை பயன்படுத்தி சிறு முதலீட்டாளர்கள் முதல் அங்குள்ள மக்கள் வரை அனைவரும் தங்கத்தை வாங்கி வருகின்றனர். சீன மக்கள் பிஸிக்கல் கோல்ட் மட்டுமின்றி ஈடிஎஃப் முதலீடுகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 2026-ஆம் ஆண்டில் ஈடிஎஃப் முதலீடுகளில் 28 டன் அளவுக்கு புதிய முதலீடுகள் குவிந்துள்ளன.

இதே வேகத்தில் சீனா தொடர்ந்து தங்கம் வாங்கிக் கொண்டே இருந்தால் 2026-ஆம் ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் வாங்கிய தங்கத்தை விட அதிக தங்கத்தை வாங்க வாய்ப்புள்ளது. இதனால் உலகச் சந்தையில் தங்கத்தின் விலை சரியாமல் தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

Share This Article

Story first published: Tuesday, July 28, 2026, 10:35 [IST]

Other articles published on Jul 28, 2026

Read More

Previous Post

ஹவுதிகளை முதல் முறையாக தொடர்பு கொண்ட சீனா! கசிந்துள்ள முக்கிய தகவல்

Next Post

சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் பரிதவிப்பு | Makkal Osai

Next Post
சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் பரிதவிப்பு | Makkal Osai

சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் பரிதவிப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin