• Login
Tuesday, July 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

35 லட்சம் சம்பளம் தரும் ஐடி வேலையை விட்டுவிட்டு.. ரீல் போடும் பெங்களூர் ஜோடி.. கடைசில என்ன நடந்தது தெரியுமா? | Muskan – Ashish: IT Couple Quits ₹35 Lakh Jobs for YouTube & Instagram – Now Earns Over ₹1 Crore a Year

GenevaTimes by GenevaTimes
July 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
35 லட்சம் சம்பளம் தரும் ஐடி வேலையை விட்டுவிட்டு.. ரீல் போடும் பெங்களூர் ஜோடி.. கடைசில என்ன நடந்தது தெரியுமா? | Muskan – Ashish: IT Couple Quits ₹35 Lakh Jobs for YouTube & Instagram – Now Earns Over ₹1 Crore a Year
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


35 லட்சம் சம்பளம் தரும் ஐடி வேலையை விட்டுவிட்டு.. ரீல் போடும் பெங்களூர் ஜோடி.. கடைசில என்ன நடந்தது தெரியுமா?

சமுக வலைத்தளமும், கன்டென்ட் கிரியேஷனும் இன்று இளம் தலைமுறையின் முக்கிய விஷயமாக மாறியுள்ளது. ஒரு சிலருக்கு வெறும் பொழுதுபோக்கு, ஒரு சிலருக்கு முழு நேர வர்த்தகமாகவும் மாறியுள்ளது. அப்படி 2023 ஆம் ஆண்டு நல்ல சம்பளம் தரும் ஐடி வேலையில் இருந்த இளம் ஜோடிகள் தங்களுடைய வேலையை விடுத்து முழு நேர கன்டென்ட் கிரியேட்டராக மாறியுள்ளனர்.

பொதுவாக எல்லோருக்கும் இதில் வெற்றி கிடைக்காது என்பது தெரிந்தாலும், முஸ்கான் மிட்டல் மற்றும் ஆஷிஷ் குப்தா ரிஸ்க் எடுத்தனர். வெறும் 3 வருடத்தில் அவர்களின் வாழ்க்கையே மொத்தமாக மாறியுள்ளது.

35 லட்சம் சம்பளம் தரும் ஐடி வேலையை விட்டுவிட்டு.. ரீல் போடும் பெங்களூர் ஜோடி.. கடைசில என்ன நடந்தது தெரியுமா?

இன்ஸ்டாகிராமில் பிரபலமான முஸ்கான் மிட்டல் மற்றும் ஆஷிஷ் குப்தா சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர்களின் கன்டென்ட் கிரியேட்டர் பாதை முழுமையாக விவரித்துள்ளனர்.

இந்த வீடியோவில் டெக் ஊழியர்களாக இருந்த இவர்கள் எப்படி கன்டென்ட் கிரியேட்டர்களாக வருடம் 1 கோடி ரூபாய் வரையில் சம்பாதிக்கின்றனர் என்பதை பகிர்ந்துள்ளனர்.

முழுநேர கன்டென்ட் கிரியேட்டர்களாக மாறுவதற்கு முன்பு முஸ்கான் மிட்டல் வருடத்திற்கு 23 லட்சம் ரூபாய் சம்பளத்துடன் Blinkit நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலெப்பர் வேலையில் இருந்துள்ளார், ஆஷிஷ் குப்தா வருடம் 12 லட்சம் ரூபாய் சம்பளத்தில் பிக் பேஸ்கட் நிறுவனத்தில் டேட்டா அனலிஸ்ட் வேலையில் இருந்துள்ளார்.

இருவரும் பெங்களூரில் பணியாற்றி வந்தனர், முதலில் இருவரும் டேட்டிங் ஆப்-ல் சந்தித்து நெருங்கி பழகினர், இவரும் சேர்ந்து பல நாடுகளும், பல ஊர்களுக்கும் ஒன்றாக சென்று கடந்த 3 வருடமாக கன்டென்ட் பதிவு செய்து வருகின்றனர்.

இவரும் டேட்டிங் செய்த காலத்தில் சென்ற வியட்நாம் பயணத்தில் இருந்து தங்களுடைய கன்டென்ட் கிரியேட்டர் பயணத்தை துவங்கினர், முதல் வீடியோ 20000 பார்வையாளர்களை பெற்றது. முதலில் டிராவல் வீடியோவில் துவங்கி தற்போது ரிலேஷன்ஷிப், ஹெல்த், ஜிம் என பலவற்றை குறித்து பகிர்ந்து வருகின்றனர்.

மே 2023 துவங்கிய இந்த பயணத்தில் முதல் கொலாப்ரேஷனுக்கு 15000 ரூபாய் கிடைத்தது, அடுத்தடுத்த வீடியோக்கு அதிகப்படியான பார்வையாளர்களை பெற்ற காரணத்தால் 2023ஆம் ஆண்டில் பல்வேறு கொலாப்ரேஷன் மூலம் 6.5 லட்சம் சம்பாதித்தோம், இதுவரையில் நாங்கள் இதை பார்ட் டைம் ஆக மட்டுமே செய்தோம் எனவும் என முஸ்கான் மற்றும் ஆஷிஷ் தங்களுடைய வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

2024ல் முக்கியமான படி, இருவரும் தங்களுடைய வேலையை விட்டுவிட்டு முழுவதுமாக இதில் இறங்கினர். கன்டென்ட் கிரியேஷன் தாண்டி குரூப் டிரிப் ஏற்பாடு செய்யும் புதிய வருவாய் வழியை கண்டுப்பிடித்தனர், இதன் மூலம் 2024 ஆம் ஆண்டில் 45 லட்சம் ரூபாய் சம்பாதித்தனர், இது அவர்களுடைய 35 லட்சம் ரூபாய் சம்பளத்தை விடவும் அதிகம்.

2வது வருடத்தில் தங்களுடைய வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், சமுக வலைத்தள சேனல்களின் வளர்ச்சியை பெருக்கவும் ஒரு ஏஜென்சி உடன் கூட்டணி வைத்தனர். இந்த கூட்டணி பெரிய அளவில் பலன் கொடுத்தது. இந்த ஏஜென்சி வாயிலாக பல்வேறு affiliates பெற்றுள்ளனர்.

2025ல் தான் மிகப்பெரிய வெற்றி, இந்த கன்டென்ட் கிரியேட்டர் பயணத்தில் 1 கோடி ரூபாய் வரையிலான வருமானத்தை ஈட்டினர். கன்டென்ட் மூலம் யூடியூப், இன்ஸ்டா வருமானம், affiliates, பிரான்ட் ஒப்பந்தம், குரூப் டிரிப் என பல வழிகளில் 1 கோடிக்கும் அதிமான வருமானத்தை ஈட்டியுள்ளனர்.

3வது வருடத்தில் ஏஜென்சி உடனான ஒப்பந்தம் முறிக்கப்பட்டு வெளியேறி தனிப்பட்ட முறையில் நிர்வாகம் செய்தது மூலம் 3வது வருடம் 1.09 கோடி ரூபாய் ஈட்டியுள்ளதாக முஸ்கான் மற்றும் ஆஷிஷ் தங்களுடைய வீடியோவில் கூறியுள்ளனர்.

இந்த வருடம் முதல் 4 மாதத்தில் மட்டும் 21 லட்சம் ரூபாய் சம்பாதித்திள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இப்படி படிப்படியாக பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்களுடைய பாதை கன்டென்ட் கிரியேஷன் மூலம் பெரிய அளவில் உருவாக வேண்டும் என கனவு காணும் அனைவருக்கும் பெரிய அளவில் உதவும்.

Share This Article

English summary

Muskan – Ashish: IT Couple Quits ₹35 Lakh Jobs for YouTube & Instagram – Now Earns Over ₹1 Crore a Year

Muskan – Ashish: IT Couple Quits ₹35 Lakh Jobs for YouTube & Instagram – Now Earns Over ₹1 Crore a Year — 35 லட்சம் சம்பளம் தரும் ஐடி வேலையை விட்டுவிட்டு.. யூடியூப், இன்ஸ்டா ரீல் போடும் ஜோடி.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

Story first published: Tuesday, July 28, 2026, 22:13 [IST]

Read More

Previous Post

அதிரடி மறுசீரமைப்புத் திட்டங்கள் : இலங்கைக் கிரிக்கெட் புத்துயிர் பெறுமா?  – Sri Lanka Tamil News

Next Post

துப்பாக்கி ஏந்திய நபரை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது – Malaysiakini

Next Post

துப்பாக்கி ஏந்திய நபரை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin