Last Updated:
இப்பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தால், இறுதிக்கட்ட ஆய்வுகளுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான புண்டிபுக்யோ (Bundibugyo) வகை எபோலா வைரஸுக்கு எதிராக உருவாக்கப்பட்ட தடுப்பூசியின் மனித பரிசோதனை இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது.
காங்கோ மற்றும் உகாண்டாவில் பரவி வரும் புண்டிபுக்யோ வகை எபோலா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. BD-Ebov எனப்படும் இந்த ஆரம்பகட்ட பரிசோதனையில், 18 முதல் 55 வயதுக்குட்பட்ட 50 ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, அதன் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு திறன் மதிப்பீடு செய்யப்பட உள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி ஆய்வுக் குழு மற்றும் Pandemic அறிவியல் நிறுவனம் இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. ஆக்ஸ்போர்டு–அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியில் பயன்படுத்தப்பட்ட அதே வைரல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஊசியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முதல் தன்னார்வலருக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஆரம்பகட்ட மனித பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தால், அவசரகால பயன்பாட்டு அனுமதி அல்லது ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெறுவதற்கான இறுதிக்கட்ட ஆய்வுகளுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jul 28, 2026 12:15 PM IST

