Last Updated:
வடமேற்கு சீனாவின் கான்சு மாகாணத்தில் திடீர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சுற்றுலா பயணிகள் சிக்கிக்கொண்டனர்.
சீனாவை நடப்பாண்டு 12ஆவது முறையாக புயல் தாக்கியது. அந்நாட்டின் குவாங்டாங் மாகாணத்தில் நோல் புயல் தாக்கியது. புயல் கரையைக் கடந்த நிலையிலும், கனமழை தொடர்ந்ததால் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கின.
ஒரே மாதத்தில் 3ஆவது முறையாக சீனாவை புயல் தாக்கி இருக்கிறது. இதனால் குவாங்டாங் மாகாணத்தில் மட்டும் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதற்கிடையே, வடமேற்கு சீனாவின் கான்சு மாகாணத்தில் திடீர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சுற்றுலா பயணிகள் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்த மீட்புக் குழுவினர் 305 தீயணைப்பு வீரர்கள், 68 வாகனங்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையில் 247 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 23 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Jul 28, 2026 10:36 AM IST


