Last Updated:
அமெரிக்கா-ஈரான் மோதல் தணிந்தது, மேற்கு ஆசியாவில் அமைதி திரும்புகிறது. ஹோர்முஸ் நீரிணை பேச்சுவார்த்தையில் முன்னேற்றம். லெபனான் இறையாண்மை உறுதிப்படுத்தல் போரின் நிபந்தனை.
அமெரிக்காவும் – ஈரானும் பரஸ்பரம் தாக்குதலை நிறுத்தியுள்ளதால் மேற்கு ஆசியாவில் போர் சூழல் தணிந்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஈரான் மீது கடந்த 12 ஆம் தேதி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதனால், இரு தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.
இரு நாடுகளுக்கும் இடையே 13 நாட்களாக போர் தொடர்ந்து வந்த நிலையில், அமெரிக்கா திடீரென தாக்குதலை நிறுத்தியுள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஈரானுக்கு சிறிது அவகாசம் வழங்க அதிபர் டிரம்ப் முடிவு செய்திருப்பதாகவும் ஐ.நா. சபைக்கான அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதான தாக்குதலையும் ஈரான் கைவிட்டு உள்ளதால் மேற்கு ஆசியாவில் சற்று அமைதி திரும்பியுள்ளது.
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக ஈரானும், ஓமானும் கடந்த இரண்டு நாட்களாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தின. இதில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், லெபனானின் இறையாண்மையை உறுதி செய்வதே போரை முடிவுக்கு கொண்டு வர முக்கிய நிபந்தனை என்று ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி அறிவித்துள்ளார்.

