• Login
Monday, July 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மத்திய அரசின் சலுகை பெறுவதால் தர்மேந்திர பிரதானுக்கு பாராட்டா? சர்ச்சைகளுக்கு Zoho ஸ்ரீதர் வேம்பு பதில் | Sridhar Vembu says 90% of Zoho’s revenue comes from outside India, denies seeking government favour

GenevaTimes by GenevaTimes
July 27, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
மத்திய அரசின் சலுகை பெறுவதால் தர்மேந்திர பிரதானுக்கு பாராட்டா? சர்ச்சைகளுக்கு Zoho ஸ்ரீதர் வேம்பு பதில் | Sridhar Vembu says 90% of Zoho’s revenue comes from outside India, denies seeking government favour
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்திய அரசின் சலுகை பெறுவதால் தர்மேந்திர பிரதானுக்கு பாராட்டா? சர்ச்சைகளுக்கு Zoho ஸ்ரீதர் வேம்பு பதில்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன் வைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் தீவிர போராட்டங்களை நடத்தினர். இதனை அடுத்து மத்திய கல்வி துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்தார். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

தர்மேந்திர பிரதான் பதவி விலகலை அறிவித்ததை அடுத்து பிரபல ஐடி நிறுவனமான Zoho நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு, தர்மேந்திர பிரதானின் சேவையை பாராட்டி பதிவு செய்திருந்தார். எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த ஸ்ரீதர் வேம்பு “திரு தர்மேந்திர பிரதான் எனக்கு தெரிந்து மிக நேர்த்தியான ஒரு பொது சேவகர். இந்த நாட்டின் இளைஞர்கள் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். கிராமப்புற மாணவர்களின் திறன் மேம்பாடு குறித்து பல முறை நாங்கள் ஆலோசனை நடத்தி இருக்கிறோம். அவர் ராஜினாமா செய்வதை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது. உங்களின் சேவைக்கு நன்றி” என கூறியிருந்தார்.

மத்திய அரசிடம் சலுகை பெறுகிறேனா?-தர்மேந்திர பிரதானை பாராட்டி சர்ச்சையில் சிக்கிய Zoho ஸ்ரீதர் வேம்பு

ஸ்ரீதர் வேம்புவின் இந்த பதிவுக்கு சிலர் கடும் விமர்சனம் தெரிவித்தனர். அதாவது ஸ்ரீதர் வேம்பு தர்மேந்திர பிரதானை ஆதரித்துப் பதிவிட்டதற்கு பின்னால், சோஹோ நிறுவனத்தின் வணிக நலன்கள் இருப்பதாக சிலர் குற்றம் சாட்டியிருந்தனர். இதற்கு பதிலளித்து ஸ்ரீதர் வேம்பு, மற்றொரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

Shri Dharmendra Pradhan is one of the finest public servants I know. He cares deeply about the youth of this nation, and particularly about rural students. We have had many discussions on how to better skill our rural youth.

I am sad to see him resign. He has put the nation…

— Sridhar Vembu (@svembu) July 25, 2026 “>

அதில், சோஹோ நிறுவனத்தின் மொத்த வருவாயில் சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமான வருவாய் இந்தியாவுக்கு வெளியிலிருந்து தான் கிடைக்கிறது என கூறியுள்ளார். உலகளாவிய கடுமையான போட்டிக்கு மத்தியிலும் தனது நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து தான் 90% வருவாயை ஈட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது நிறுவனத்தின் மொத்த வருவாயில் இந்திய அரசாங்கத்திடமிருந்து வரும் ஒப்பந்தங்களின் பங்கு வெறும் 2 சதவீதம் மட்டுமே என கூறியுள்ள அவர் அரசுடன் இணைந்து செயல்படும்போது, வரி செலுத்தும் சாமானிய மக்களின் பணத்தை சேமிப்பதையே நாங்கள் எப்போதும் முன்னுரிமையாக கருதுகிறோம், மேலும் நாட்டில் அதிகமாக வரி செலுத்தும் நிறுவனங்களின் சோஹோவும் ஒன்று என்பதில் பெரிமிதம் கொள்கிறோம் என கூறியுள்ளார்.

Some facts: about 90% of our revenue comes from outside India, won against tough global competition.

About 2% of our revenue is from the government and when we do business with the government, we always save the taxpayer money, which we have the utmost respect for. We are also…

— Sridhar Vembu (@svembu) July 25, 2026 “>

நான் இதுவரை எந்தவொரு அரசாங்கத்திடமும் எந்த சலுகையும் கேட்டதும் இல்லை, இனி கேட்க போவதும் இல்லை என கூறியுள்ள அவர், அரசியல் சார்பின்றி தான் ஆலோசனைகளை வழங்குவதாகவும், கேரளாவில் இடது முன்னணி அரசு ஆட்சியில் இருந்தபோது, தகுந்த ஆலோசனைகள் மூலம் அங்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை உருவாக்க உதவியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டிலும் முதலமைச்சர் மேற்கொண்டு வரும் நல்ல முன்னெடுப்புகளை தான் ஆதரிப்பதாக கூறும் அவர், இது அரசியல் காரணங்களுக்காக அல்ல, மாநிலத்தில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே என கூறியுள்ளார். விமர்சனங்கள் மற்றும் மிரட்டல்களுக்கு பணியப்போவதில்லை என்றும், நாட்டின் நலனை முன்வைத்து தனது கருத்துக்களை தொடர்ந்து தெரிவிப்பேன் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விமர்சனங்கள் தங்களை மேலும் வலுப்படுத்துமே தவிர, பின்வாங்க செய்யாது என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Share This Article

English summary

Sridhar Vembu says 90% of Zoho’s revenue comes from outside India, denies seeking government favour

மத்திய அரசிடம் சலுகை பெறுகிறேனா?-தர்மேந்திர பிரதானை பாராட்டி சர்ச்சையில் சிக்கிய Zoho ஸ்ரீதர் வேம்பு: Zoho co-founder Sridhar Vembu said that around 90% of the company’s revenue is earned outside India, while government contracts account for only about 2% of its business.

Story first published: Monday, July 27, 2026, 9:17 [IST]

Other articles published on Jul 27, 2026

Read More

Previous Post

காமன்வெல்த் 2026: பளுதூக்கும் போட்டியில் தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளி பதக்கம் வென்று அசத்தல் | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

92 வயதிலும் அசத்தும் பெண் மருத்துவர்: 2 லட்சம் பிரசவங்கள் பார்த்து சாதனை

Next Post

92 வயதிலும் அசத்தும் பெண் மருத்துவர்: 2 லட்சம் பிரசவங்கள் பார்த்து சாதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin