டி-20 உலகக்கோப்பை போட்டி பயிற்சி ஆட்டத்தை வெற்றியுடன் இந்திய அணி தொடங்கியுள்ளது.
நியூயார்க்கில் நடந்த உலக கோப்பை தொடருக்கான பயிற்சிப் போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். கேப்டன் ரோகித் சர்மா 23 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் வந்த ரிஷப் பந்த், அதிரடியாக 32 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். இதேபோல சூர்யகுமார் யாதவ் 31 ரன்களையும், ஹாட் ட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்திய ஹர்திக் பாண்ட்யா, ஆட்டமிழக்காமல் 40 ரன்களையும் சேர்த்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்களை குவித்தது.
பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் மஹ்முதுல்லா மட்டும் நிலைத்து நின்று 40 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
.
&w=750&resize=750,375&ssl=1)
