கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம், கே.ஆர். பெட் பகுதியில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, “இன்று தேர்தலில் போட்டியிட்டால் மக்களுக்குப் பணம் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அரசியல் இன்று முற்றிலும் சீர்கெட்டுவிட்டது. நேர்மையான அரசியலுக்கு இடமில்லாத நிலை காணப்படுகிறது. இத்தகைய பின்னணியில், இனிவரும் தேர்தல்களில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.


