• Login
Sunday, July 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சொந்த வீடு கட்ட ஆசையா? 1 கோடி குடும்பங்களுக்கு அரசு அள்ளித் தரும் ஆஃபர்! | PMAY 2.0: 1 crore more families to get own house. See who all are eligible

GenevaTimes by GenevaTimes
July 26, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சொந்த வீடு கட்ட ஆசையா? 1 கோடி குடும்பங்களுக்கு அரசு அள்ளித் தரும் ஆஃபர்! | PMAY 2.0: 1 crore more families to get own house. See who all are eligible
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சொந்த வீடு கட்ட ஆசையா? 1 கோடி குடும்பங்களுக்கு அரசு அள்ளித் தரும் ஆஃபர்!

மழையிலும், வெயிலிலும் அயராது உழைத்து வாடகை வீடுகளில் வசிக்கும் மிடில் கிளாஸ் மக்களுக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பல நாள் கனவு. இந்த கனவை நினைவாக்க மத்திய அரசு துவங்கிய மகத்தான திட்டம் தான் “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அர்பன் 2.0”. இந்த திட்டத்தை பிரதம மந்திரியின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் என்றும் அழைப்பார்கள். இத்திட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீடு என்ற உன்னதமான இலக்கை நோக்கி அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 (PMAY-U 2.0)என்றால் என்ன?: வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், நகர்புறங்களில் வாழும் ஏழை எளியவர்களுக்காக இந்த திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலம் வறுமையில் வாடும் குடும்பங்கள் தங்களுக்கென ஒரு புதிய வீட்டை கட்டிக் கொள்ளலாம்.

சொந்த வீடு கட்ட ஆசையா? 1 கோடி குடும்பங்களுக்கு அரசு அள்ளித் தரும் ஆஃபர்!

2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது. PMAY-U 2.0 திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் இன்னும் கூடுதலாக 1 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்டித் தர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் 2.0-வின் கீழ் மக்களுக்கு 4 வழிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. முதலாவதாக சொந்த நிலம் வைத்திருப்பவர்களுக்கு வீடு கட்ட நிதி உதவி வழங்கப்படுகிறது. பழைய வீட்டில் குடியிருந்தாலும் அதை சீரமைத்து கொள்ளலாம்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து கட்டும் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க நினைப்பவர்களுக்கும் மானிய விலையில் வீடு வழங்கப்படும். ஒரு சிலர் வேலைக்காக வெளியூரில் தங்கி இருப்பார்கள். இது போன்றவர்களுக்கும், சொந்த வீடு வாங்க முடியாதவர்களுக்கும் மிகக் குறைந்த மாத வாடகையில் வீடுகள் வழங்கப்படுகிறது.

சிலர் பேங்கில் ஹோம் லோன் வாங்கி வீடு கட்டுவார்கள். இதுபோன்ற நபர்களுக்கும் வட்டியில் மானியம் வழங்கப்படுகிறது. அதாவது வட்டியில் ஒரு பகுதியை அரசு ஏற்றுக்கொள்ளும். இதனால் சிரமப்பட்டு வீடு கட்டும் மிடில் கிளாஸ் மக்களின் மாதத் தவணை வெகுவாக குறையும். இப்படி பல வழிகளில் இந்த திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?: மாநில அரசும், யூனியன் பிரதேசங்களும் சேர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்களை கண்டறியும். பின்னர் அவை அரசுக்கு அனுப்பும் பரிந்துரையின் அடிப்படையில் தான் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நகர்ப்புறங்களில் வசித்துக் கொண்டு வீடு கட்ட முடியாமல் இருப்பவர்கள், வீடு இல்லாதவர்கள், பொருளாதார ரீதியாக பின் தங்கிய நபர்கள், குறைந்த வருவாய் ஈட்டுபவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல வேறு ஏதேனும் நகர்ப்புற அல்லது கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றிருந்தால் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. குறைந்த வருமானம் ஈட்டும் பிரிவில் ஆண்டு வருமானம் 3 லட்சம் வரை உள்ள குடும்பங்கள் விண்ணப்பிக்கலாம். தனியாக வசிக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், திருநங்கைகள், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் சிறுபான்மையினர் போன்றோரும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

2015-ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இந்நாள் வரையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 2026-ஆம் ஆண்டின் ஜூலை 13 நிலவரப்படி, PMAY திட்டத்தின் மூலம் நாடெங்கிலும் சுமார் 127.68 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் 121.02 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான கட்டுமான பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டன. மேலும் 99.07 வீடுகள் கட்டப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பிரதான் மந்திரி இலவச வீடு திட்டத்தின் பயனாளர்கள் அதிகமாக இருக்கின்றனர்.தமிழகத்தில் இதுவரையில் 6.86 லட்சம் வீடுகளுக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 18,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக 6.74 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு கட்டுமான பணிகளும் தொடங்கப்பட்டு விட்டன. 6.32 லட்சம் பயனாளர்களுக்கு வீடு கட்டி வெற்றிகரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சமீப காலமாக இத்திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டது. அதற்கும் அரசு பதிலளித்துள்ளது. PMAY-இன் கீழ் வீடு கட்டி தர 12 முதல் 36 மாதங்கள் வரை ஆகிறது. நிலம் வைத்திருந்தால் பிரச்சனை இல்லை. சொந்த நிலமும் இல்லாதவர்களுக்கு நிலம் கிடைப்பதில் தாமதம், அரசு அனுமதி பெறும் செயல்முறையில் தாமதம் போன்றவற்றின் காரணமாக சில இடங்களில் வீட்டை முடித்து ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுகிறது, இவற்றையும் சரி செய்ய அரசு தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

பிரதான் மந்திரி இலவச வீடு திட்டத்தின் கீழ் கட்டித் தரப்படும் வீடுகளில் என்னென்ன வசதிகள் இருக்கும்?: இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, எலக்ட்ரிசிட்டி கனெக்சன், சாலை வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு வழங்கி வருகிறது.

Share This Article

Story first published: Sunday, July 26, 2026, 6:00 [IST]

Other articles published on Jul 26, 2026

Read More

Previous Post

தெங் செபத: தன்னைத் தானே பார்த்து மகிந்த கேட்க வேண்டிய ஒரே கேள்வி

Next Post

ஆட்சியாளர்களை முழங்காலிட வைக்க முடியும் என்பதை சிஜேபி நிரூபித்துவிட்டார்கள் – பிரகாஷ் ராஜ் … | Makkal Osai

Next Post
ஆட்சியாளர்களை முழங்காலிட வைக்க முடியும் என்பதை சிஜேபி நிரூபித்துவிட்டார்கள் – பிரகாஷ் ராஜ் … | Makkal Osai

ஆட்சியாளர்களை முழங்காலிட வைக்க முடியும் என்பதை சிஜேபி நிரூபித்துவிட்டார்கள் - பிரகாஷ் ராஜ் ... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin