திசைகாட்டி அரசு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது என்றும், தற்போது ஆட்சியைத்
தக்கவைக்கத் தினமும் பிழையான நகர்வில் பயணிக்கின்றது எனவும்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
டித்வா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதாகக்
கூறிவிட்டு, அரசினர் நிவாரணம் வழங்காமல் பாதிக்கப்பட்ட மக்களுடன் சமூக
வலைத்தளங்களில் படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவிடுவதில் மட்டுமே கவனம்
செலுத்துகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஹொரவ்பொத்தானை, வகொல்லாகொட போதிரூக்காராம மகா விகாரையில் தர்ம போதனை
மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர்
இதனைக் குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கு நட்டம்
விவசாயிகளை கடவுள் என்றும், நெல் கிலோ ஒன்றுக்கு 150 ரூபா உத்தரவாத விலை
தருவதாகக் கூறியவர்கள், இன்று விவசாயிகளைப் பார்த்து கசிப்புக்காரன் என்று
அவமதிக்கின்றனர் என்றும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

மேலும், நெல் கிலோ ஒன்றுக்கு 137 ரூபா செலவாகும் என விவசாய அமைச்சரே கூறிய போதிலும்,
120 ரூபா விலையே வழங்கப்படுவதால் விவசாயிகளுக்குக் கிலோ ஒன்றுக்கு 17 ரூபா
நட்டம் ஏற்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

