• Login
Saturday, July 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ITR தாக்கல் செய்தால் மட்டும் போதாது! இதை செய்யலன்னா உங்க ஃபைலிங் செல்லாது! ரீஃபண்ட் கிடைக்காது! | ITR Filing 2026: If you miss e-verification step, your ITR is considered as invalid

GenevaTimes by GenevaTimes
July 25, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ITR தாக்கல் செய்தால் மட்டும் போதாது! இதை செய்யலன்னா உங்க ஃபைலிங் செல்லாது! ரீஃபண்ட் கிடைக்காது! | ITR Filing 2026: If you miss e-verification step, your ITR is considered as invalid
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ITR தாக்கல் செய்தால் மட்டும் போதாது! இதை செய்யலன்னா உங்க ஃபைலிங் செல்லாது! ரீஃபண்ட் கிடைக்காது!

நடப்பு நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31. அதற்கு இன்றோடு சேர்த்து இன்னும் 6 நாட்கள் இருக்கிறது. கடைசி தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்வது எவ்வளவு முக்கியமோ? அதே அளவுக்கு முக்கியம் ஈ-வெரிஃபிகேஷன் செய்வது. ஆனால் பலர் இந்த ஒரு விஷயத்தை மட்டும் கவனிப்பதே இல்லை. இந்த செயல்முறையை நீங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் நீங்கள் தாக்கல் செய்த ITR செல்லாததாகக் கருதப்படும். அதாவது நீங்கள் வருமான வரி தாக்கல் செய்திருந்தாலும்.. அவற்றை வருமானவரித்துறை ஏற்றுக்கொள்ளாது.

ஏன் இந்த ஈ-வெரிஃபிகேஷன்: நீங்கள் ITR படிவத்தை சமர்ப்பித்த பிறகு அதை சரி பார்க்க வேண்டும். உண்மையிலேயே வரி செலுத்தும் நபர் தான் ITR தாக்கல் செய்திருக்கிறாரா? அவர் வழங்கிய விவரங்கள் அனைத்தும் உண்மையானது தானா என்பதை உறுதிப்படுத்துவதற்காக தான் இந்த செயல்முறை.

ITR தாக்கல் செய்தால் மட்டும் போதாது! இதை செய்யலன்னா உங்க ஃபைலிங் செல்லாது! ரீஃபண்ட் கிடைக்காது!

அப்போதுதான் வருமானவரித்துறை உங்களுடைய ITR-ஐ ஏற்றுக்கொள்ளும். இல்லை என்றால் நீங்கள் மீண்டும் முதலிலிருந்து தொடங்கி ITR தாக்கல் செய்ய வேண்டி வரும்.

ஈ-வெரிஃபிகேஷன் செயல்முறை முடிந்த பிறகு தான் வருமானவரித்துறை அடுத்த செயல்முறையை தொடங்கும். உதாரணமாக வரி செலுத்துபவர் ரீஃபண்ட் பெற தகுதியுடையவர் என்றால் ஈ-வெரிஃபிகேஷன் முடிந்த பிறகே உங்களுக்கு வரவேண்டிய ரீஃபண்ட் தொகை அக்கவுண்டுக்கு வரும். தற்போது அனைத்து செயல்முறைகளையும் வருமானவரித்துறை வேகமாக்கியுள்ளது.

கடந்த முறை 90 நாட்கள் வரை ரீஃபண்ட் தொகை வழங்குவதற்கு நேரம் ஆனது. ஆனால் இந்த முறை வெறும் 1 நாளில் ரீஃபண்ட் தொகையை பெற்று வருவதாக சிலர் தெரிவித்துள்ளனர். எனவே இதற்கும் இந்த ஈ-வெரிஃபிகேஷன் மிக மிக முக்கியம்.

இணையதளம் மூலமாகவே ஆன்லைனில் இதைச் செய்யலாம். இதற்கு முன்னர் ஐடிஆர் V படிவத்தை பெங்களூரில் இருக்கும் சிபிசி மையத்திற்கு போஸ்ட் மூலம் அனுப்ப வேண்டி இருந்தது. ஆனால் இப்போது ஆன்லைன் மூலமாகவே செய்து முடிக்கலாம்.

ஈ-வெரிஃபிகேஷன் செய்வதற்கு என்னென்ன இருக்க வேண்டும்?: ஈ-வெரிஃபிகேஷன் செயல்முறைக்கு நீங்கள் பான் கார்டு, ஆதார் கார்டு மற்றும் பேங்க் அக்கவுண்ட் விவரங்களை வைத்திருக்க வேண்டும். கண்டிப்பாக பான் கார்டு, ஆதார் கார்டும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதேபோல உங்களுடைய வங்கி கணக்கை சரிபார்த்து வைத்திருக்க வேண்டும். ஆதாரில் கண்டிப்பாக நீங்கள் பதிவு செய்த மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதோடு வருமான வரி தாக்கல் செய்தவர்கள் கையில் அக்னாலேஜ்மென்ட் நம்பரை வைத்திருக்க வேண்டும்.

எப்படி ஈ-வெரிஃபிகேஷன் செய்வது?: இதை பல வழிகளில் செய்யலாம். ஆதார் ஒடிபி, நெட் பேங்கிங், எலக்ட்ரானிக் வெரிஃபிகேஷன் கோட், டிஜிட்டல் சிக்னேச்சர் சர்டிபிகேட் மற்றும் ஏடிஎம் போன்ற பல வழிகளைப் பயன்படுத்தி சரிபார்ப்பு செயல்முறையை முடிக்கலாம்.

வரி செலுத்துபவர்கள், நெட் பேங்கிங் பயன்படுத்திக் கொண்டிருந்தால்.. அவர்கள் அதன் மூலமாகவே வருமானவரித்துறையின் ஈ-ஃபைலிங் போர்ட்டலை பயன்படுத்தலாம். அதுவே எலக்ட்ரானிக் வெரிஃபிகேஷன் கோட் மூலம் சரிபார்க்க உங்களுடைய வங்கி கணக்கு மூலம் ஈவிசி கோடை ஜெனரேட் செய்து அதை போர்ட்டலில் வழங்கலாம்.

இதை சிரமமாக நினைப்பவர்கள் உங்களுடைய வங்கி ஏடிஎம்ம்கள் மூலமாக எலக்ட்ரானிக் வெரிஃபிகேஷன் கோடை ஜெனரேட் செய்து, அதை போர்ட்டலில் வழங்க வேண்டும். இந்த கோடு நேரடியாக உங்கள் மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும். இமெயில் முகவரிக்கும் அனுப்பப்படும்.

எனவே ஐடிஆர் தாக்கல் செய்தவர்கள் முதல் படியை மட்டும் தான் முடித்திருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதன் பிறகு வருமானவரித்துறை நிர்ணயித்த காலகெடுவுக்குள் வெரிஃபிகேஷன் செயல்முறையையும் முடிக்க வேண்டும். இதை ஓரிரு நிமிடங்களில் எளிதில் முடிக்கலாம்.

Share This Article

Story first published: Saturday, July 25, 2026, 15:13 [IST]

Other articles published on Jul 25, 2026

Read More

Previous Post

விராட் கோலியின் சாதனையை காலி செய்த இஷான் கிஷன்! ஒரே ஆண்டில் 783 ரன்கள் குவித்து சாதனை

Next Post

குடிநுழைவு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களிடமிருந்து அகதிகள் பதிவு ஆவணத் திட்டம் தொடங்குகிறது | Makkal Osai

Next Post
குடிநுழைவு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களிடமிருந்து அகதிகள் பதிவு ஆவணத் திட்டம் தொடங்குகிறது | Makkal Osai

குடிநுழைவு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களிடமிருந்து அகதிகள் பதிவு ஆவணத் திட்டம் தொடங்குகிறது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin