2021ல் தர்மேந்திர பிரதான மத்திய கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். தேசிய கல்வி கொள்கை முழு வீச்சில் நடைமுறைப்படுத்தப்பட்டது. குறிப்பாக, பிஎம் ஸ்ரீ பள்ளிகள், மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுடன் தொடர மோதல் போக்கை கொண்டிருந்தார். குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கையை நிராகரித்த காரணத்தால், தமிழ்நாட்டிற்கான பள்ளிக்கல்வி நிதியை நிறுத்தி வைத்தார். இதற்கெல்லாம் சிகரம் வைத்தால் போல், தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் மற்றும் UGC-NET தேர்வுகளில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவுகள், முறைகேடுகள் லட்சக்கணக்கான மாணவர்களையும் பெற்றோர்களையும் வீதிக்குக் கொண்டு வந்தன.


