பலாங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹவலதன்ன பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரின் சடலம், மஹவலதன்ன கஹவத்த பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
பலாங்கொட பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் பலாங்கொட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி ஆவார்.
கடந்த வியாழக் கிழமை காலையில் மேற்படி சிறுமி வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த நிலையில், அவரது தந்தையினால் பலாங்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே, சிறுமியின் சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இது கொலையா, தற்கொலையா அல்லது நீரில் மூழ்கி ஏற்பட்ட மரணமா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
பலாங்கொட மருத்துவமனையில் இன்று பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

