• Login
Saturday, July 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை: ஜூலை மாசத்துல என்னென்ன நடந்திருக்கு பாருங்க..!! வெள்ளி விலையை அடிச்சிக்கவே முடியாது..!! | July Gold Price Shock in Tamil Nadu: Why Gold Prices Moved Up and Down in the Last 25 Days

GenevaTimes by GenevaTimes
July 25, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம் விலை: ஜூலை மாசத்துல என்னென்ன நடந்திருக்கு பாருங்க..!! வெள்ளி விலையை அடிச்சிக்கவே முடியாது..!! | July Gold Price Shock in Tamil Nadu: Why Gold Prices Moved Up and Down in the Last 25 Days
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் விலை: ஜூலை மாசத்துல என்னென்ன நடந்திருக்கு பாருங்க..!! வெள்ளி விலையை அடிச்சிக்கவே முடியாது..!!

ஜூன் மாதத்தில் தங்கம் விலை 10% வரை குறைந்தது. இதனால் ஜூலையிலும் இதே போல விலை இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த 25 நாட்களில் தங்கம் விலையில் பெரிய மாற்றமே நிகழ்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று தடாலடியாக விலை குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை தந்த தங்கம் இன்று விலை உயர்ந்திருக்கிறது. 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 13,230 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே இன்று 70 ரூபாய் விலை உயர்ந்து 13,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 560 ரூபாய் விலை உயர்ந்து 1,06,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை: ஜூலை மாசத்துல என்னென்ன நடந்திருக்கு பாருங்க..!! வெள்ளி விலையை அடிச்சிக்கவே முடியாது..!!

தங்கம் விலையை பொருத்தவரை ஜூலை மாதத்தில் ஏறுவதும் இறங்குவதும் ஆகவே காணப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஜூலை 1ஆம் தேதி அன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 13,250 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. அதன் பின் ஒரு நாள் விலை ஏறுவது விலை இறங்குவது என காணப்பட்ட தங்கம், கடந்த 18ஆம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக விலை உயர்ந்தது. அந்த வகையில் இந்த மாதத்திலேயே இல்லாத வகையில் தொடர்ந்து ஐந்து நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்தது.

அவ்வளவுதான் இனி தங்கம் விலை எகிற போகிறது என மக்கள் எண்ணிய நிலையில் நேற்றைய தினம் ஒரு கிராமுக்கு 270 ரூபாய் விலை சரிந்து ஆச்சரியம் தந்தது.இன்றைய தினம் மீண்டும் விலை கூடிவிட்டது. இன்று சனிக்கிழமை என்பதால் நாளைய தினமும் இதை விலைக்கு தான் தங்கம் விற்பனை செய்யப்படும்.

24 கேரட் தங்கத்தை பொருத்தவரை ஒரு கிராம் 14,509 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது 10 கிராம் 1,45,090 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,115 ரூபாய்க்கும் ஒரு சவரன் 88,920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியை பொருத்தவரை அதன் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 240 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,40,000 ரூபாய்க்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாதத்தில் மட்டும் வெள்ளியின் விலையை கணக்கிட்டு பார்த்தால் 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் 245 ரூபாயாக இருந்தது இதன் பின்னர் விலை ஏறுவது இறங்குவது என ஜூலை 14-ஆம் தேதி அன்று ஒரு கிராம் 235 ரூபாய் என சரிவை சந்தித்தது. அதன் பிறகு விலை ஏறி தற்போது 240 ரூபாயாக உள்ளது.

ஈரான் போர் போக்கு, கச்சா எண்ணெய் விலை மாற்றம், அமெரிக்க மத்திய வங்கி அறிவிப்புகள் இவை தான் வரும் வாரத்தில் தங்கம், வெள்ளியின் விலையை நிர்ணயம் செய்பவையாக இருக்க போகின்றன. இருந்தாலும் அடுத்த சில வாரங்களுக்கு பெரிய அளவில் விலை ஏற்றம் இருக்காது என்றே சொல்லப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

July Gold Price Shock in Tamil Nadu: Why Gold Prices Moved Up and Down in the Last 25 Days

தங்கம் விலை: ஜூலை மாசத்துல என்னென்ன நடந்திருக்கு பாருங்க..!! – Gold prices in July have been highly volatile, with sharp rises and sudden drops rather than a steady fall after June’s correction. Silver has stayed mostly stable, while global factors like Iran tensions, crude oil, and US Federal Reserve signals are expected to guide the next move.

Story first published: Saturday, July 25, 2026, 10:48 [IST]

Other articles published on Jul 25, 2026

Read More

Previous Post

“முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகாவை நாங்கள் போட்டியாளராகப் பார்க்கிறோம்” – தெலங்கானா அமைச்சர்

Next Post

காவிரி விவகாரம்: தமிழக முதல்-அமைச்சர் விஜய்யுடன் பேச தயார்; டி.கே.சிவக்குமார் பேட்டி | Makkal Osai

Next Post
காவிரி விவகாரம்: தமிழக முதல்-அமைச்சர் விஜய்யுடன் பேச தயார்; டி.கே.சிவக்குமார் பேட்டி | Makkal Osai

காவிரி விவகாரம்: தமிழக முதல்-அமைச்சர் விஜய்யுடன் பேச தயார்; டி.கே.சிவக்குமார் பேட்டி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin