Last Updated:
இதேபோல, 5 செயற்கைக்கோள்களுடன் லிஜியான்-1 ராக்கெட்டையும் சீனா விண்ணில் ஏவியது.
புதிய தரவு பரிமாற்றத்திற்கான செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
அந்நாட்டின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள சிச்சாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து டியான்லியன்-2- 06 என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. அது திட்டமிட்டபடி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணுக்கு மனிதர்கள் பயணிப்பதற்கான விண்வெளி திட்டங்களுக்கு தரவு பரிமாற்றம், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு சேவைகளை இது வழங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோல, 5 செயற்கைக்கோள்களுடன் லிஜியான்-1 ராக்கெட்டையும் சீனா விண்ணில் ஏவியது. Lijian-1 Y15 ஏவுகலன் மூலம் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வணிக விண்வெளித் திட்டத்தில் முக்கிய மைல்கல் என இதனை சீனா குறிப்பிட்டுள்ளது.


