இதனிடையே, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2024-இல் இயற்றப்பட்ட பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வினாத்தாள் கசிவு குறித்த வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைத்து, 3 மாதங்களுக்குள் விசாரித்து முடித்து தண்டனை வழங்க வழிவகை செய்யும் வகையில் சட்டத்திருத்தம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.


